மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே.17) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 449 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 33 ஆயிரத்து 72 நபர்களுக்கும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மூன்று நபர்களுக்கும் என 33 ஆயிரத்து 75 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 2 கோடியே 48 லட்சத்து 75 ஆயிரத்து 246 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 16 லட்சத்து 31 ஆயிரத்து 291 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 596 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்து மேலும் 20 ஆயிரத்து 486 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 81 ஆயிரத்து 690ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துமனையில் 152 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 153 நோயாளிகளும் என மேலும் 335 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,005ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் வைரஸ் தொற்றினால் 6,150 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மாவட்டம் வாரியாக மொத்தப் பாதிப்பு விவரம்:
சென்னை - 4,44,371
செங்கல்பட்டு - 1,15,595
கோயம்புத்தூர் - 1,18,804
திருவள்ளூர் - 82,735
சேலம் - 52,442
காஞ்சிபுரம் - 51,848
கடலூர் - 38,830
மதுரை - 48,441
வேலூர் - 35,525
தஞ்சாவூர் - 35,241
திருவண்ணாமலை - 31,214
திருப்பூர் - 37,480
கன்னியாகுமரி - 33,865
திருச்சிராப்பள்ளி - 38,525
தூத்துக்குடி - 36,365
திருநெல்வேலி - 36,201
தேனி - 27,851
விருதுநகர் - 26,556
ராணிப்பேட்டை - 27,336
விழுப்புரம் - 26,452
ஈரோடு - 34,189
நாமக்கல் - 22,400
திருவாரூர் - 20,438
திண்டுக்கல் - 21,256
புதுக்கோட்டை - 17,638
கள்ளக்குறிச்சி - 16,225
நாகப்பட்டினம் - 19,862
தென்காசி - 16,788
நீலகிரி - 13,087
கிருஷ்ணகிரி - 23,655
திருப்பத்தூர் - 15,428
சிவகங்கை - 11,448
தர்மபுரி - 13,730
ராமநாதபுரம் - 12,498
கரூர் - 11,888
அரியலூர் - 7,775
பெரம்பலூர் - 4,802
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,004
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075
ரயில் மூலம் வந்தவர்கள் - 428