ETV Bharat / state

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

author img

By

Published : Aug 23, 2022, 5:33 PM IST

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு நாளை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 24ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக 24ஆம் தேதி மாலை 3 மணிக்கு http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

மாணவர்கள் தங்களின் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றைப்பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு 29ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்குச்சென்று கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். கட்டணங்களைப் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:மத்திய அரசில் சுருக்கெழுத்தாளர் சி மற்றும் டி நிலைத் தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.