ETV Bharat / state

தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிக்கல் - விவரம் உள்ளே! - பதினோராம் வகுப்பு அரியர் பாடங்களுக்கு தேர்வு

தமிழ்நாட்டில் 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் அடுத்தடுத்த தினங்களில் வருவதால், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அந்தப் பாடங்களுக்குத் தயாராவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிக்கல்- விவரம் உள்ளே!

author img

By

Published : Feb 3, 2023, 10:32 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் +1 வகுப்பு பொதுத்தேர்வில் அரியர்(தேர்ச்சி பெறாத நிலை) வைத்திருந்தாலும், பன்னிரெண்டாம் வகுப்பில் தொடர்வதற்கு அனுமதி அளிக்கப்படுகின்றது. அவ்வாறு சேரக்கூடிய மாணவர்கள் தோல்வியடைந்த பாடங்களை எழுதி தேர்ச்சிப் பெற வேண்டும்.

இந்த நிலையில் நடப்பாண்டிற்கான பொதுத் தேர்வுக்காக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், சில தேர்வுகளுக்கு உரிய தேதிகள் அடுத்தடுத்த தினங்களில் நடத்தப்பட இருக்கின்றது. இதனால் 11-ம் வகுப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திற்கு நடைபெற உள்ள தேர்வுக்கு மட்டுமே தயாராக முடியும்.

மேலும், 11-ம் வகுப்பிற்கு மார்ச் 20-ம் தேதி இயற்பியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. ஆனால் 12-ம் வகுப்பிற்கு அடுத்த நாளான மார்ச் 21-ம் தேதி இயற்பியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது. அதேபோன்று மார்ச் 27-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28-ம் தேதி வேதியியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது. இரண்டு முக்கியமான தேர்வுகள் அடுத்தடுத்த தினங்களில் நடைபெறுவதால், 11-ம் வகுப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் 12-ம் வகுப்பு கணினி தேர்விற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படிக்க முடியும்.

இதனைக்கருத்தில் கொண்டு பதினொன்றாம் வகுப்பு அரியர் பாடங்களுக்கான தேர்வினை பொதுத்தேர்வு முடிந்த பிறகு வேறொரு தினத்தில் வைத்து முடிக்க வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:"நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் புகழ்பெற்ற கால்கா - ஷிம்லா இடையே இயக்கப்படும்"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.