ETV Bharat / state

Kalakshetra : கலாஷேத்ராவில் தவறு நடந்திருந்தால் யாரும் தப்ப முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரியாக்‌ஷன்! - கலாஷேத்ரா பவுண்டேஷன்

கலாஷேத்ரா பவுண்டேஷன் கல்லூரியில் எழுந்த பாலியல் புகார் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்திருந்தால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

Etv bharat
Etv bharat
author img

By

Published : Mar 31, 2023, 1:12 PM IST

சென்னை : கலாசேத்ரா பவுண்டேஷன் கல்லூரியில் எழுந்த பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்ட ரீதியிலான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவான்மியூர் கலாசேத்ரா பவுண்டேஷன் கல்லூரியில் எழுந்த பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாகச் சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் பாலாஜி, வேல்முருகன், அருள் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குப் பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "ஒன்றிய அரசினுடைய கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய, கலாஷேத்ரா பவுன்டேஷன் விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து பாலியல் தொல்லை என ட்விட்டர் செய்தி போட்டு, 21-3-2023 அன்று நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.-க்குக் கடிதம் எழுதியது.

இது தொடர்பாக, கலாஷேத்ரா பவுன்டேஷன் இயக்குநர், நமது மாநில காவல் துறைத் தலைவரைச் சந்தித்து, தங்களது நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். பிறகு தேசிய மகளிர் ஆணையமே நாங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி அடிப்படையில் அவ்வாறு விசாரித்தோம். அந்த விசாரணையை முடித்து வைத்து விட்டோம் என 25-3-2023 அன்று டி.ஜி.பி.-க்குக் கடிதம் எழுதித் தெரிவித்து இருக்கிறார்.

பின்னர், கடந்த 29-3-2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து கலாஷேத்ராவில் இருக்கக் கூடிய 210 மாணவிகளிடம் விசாரித்து விட்டுச் சென்று உள்ளார். அப்போது காவல் துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல் துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

இந்த நிலையில், மாணவிகள் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்ரா பவுன்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

இந்த விவகாரம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டார்கள்.

இன்று காலையில், மீண்டும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, மாணவிகள் மற்றும் நிர்வாகத்தினருடன் பேசி வருகிறார்கள். மேலும், அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

அரசைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : கொசு விரட்டியால் நேர்ந்த சோகம் - கார்பன் மோனாக்சைடு நச்சை சுவாசித்த 6 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.