ETV Bharat / state

Parkash Singh Badal: பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பர்காஷ் சிங் பாதல் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! - Parkash singh Badal age

முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

CM Mk stalin Condolence to Parkash singh badal

author img

By

Published : Apr 26, 2023, 11:27 AM IST

சென்னை : 5 முறை பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவர் பர்காஷ் சிங் பாதல்(95). சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரான பர்காஷ் சிங் பாதல், இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகளால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (ஏப். 25) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் "நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய திரு.பிரகாஷ் சிங் பாதல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஐந்து முறை பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து அம்மாநில நலனில் மிகுந்த பற்று கொண்டவராகத் திகழ்ந்தவர் திரு. பிரகாஷ் சிங் பாதல் அவர்கள். அவரது பங்களிப்புகளை அம்மாநில மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவருமே எந்நாளும் நினைவு கூர்வர். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், பஞ்சாப் மாநில மக்களுக்கும், சிரோமணி அகாலி தளம் கட்சியினருக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டு உள்ளார்.

  • Deeply saddened by the demise of veteran leader and five-time CM of Punjab Thiru. Parkash Singh Badal. His rich contributions to Indian polity & Punjab's welfare will always be etched in our memories.

    Deepest condolences to his bereaved family & admirers. pic.twitter.com/ikEfSy2LTB

    — M.K.Stalin (@mkstalin) April 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பஞ்சாப் முதலமைச்சர் பக்வத் மான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பரகாஷ் சிங் பாதல் மறைவையொட்டி நாடு முழுவதும் இரண்டு நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. அதேபோல் பஞ்சாப் அரசும் இன்று (ஏப். 26) அரசு விடுமுறை அளித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மேலும் அனைத்து அரசு பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. லம்பியில் உள்ள பாதல் கிராமத்தில் வைத்து பர்காஷ் சிங் பாதலின் இறுதி சடங்குகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 5 முறை பஞ்சாப் முதலமைச்சராக இருந்த பர்காஷ் சிங் பாதல் கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே காணப்பட்டார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பல்வேறு இன்னல்கள் விளைவிக்கப்பட்டதாக கூறி மத்திய அரசை கண்டித்த பரகாஷ் சிங் பாதல், கடந்த 2015 ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

இதையும் படிங்க : பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பர்காஷ் சிங் பாதல் மறைவுக்கு 2 நாள் அரசு துக்கம் - பிரதமர் மோடி அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.