சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் இன்று (அக்.27) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழகத்தில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் பெண்கள் 3.10 கோடி பேர், ஆண்கள் 3 கோடி பேர், மூன்றாம் பாலினத்தவர் 8 ஆயிரத்து 16 பேர் உள்ளனர். மேலும் தமிழகத்தில், அதிகமாக வாக்காளர்கள் இருக்கும் சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடக்கும் இந்தச் சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்கு படிவங்களை அளிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை அளிக்க டிசம்பர் 9ஆம் தேதி கடைசி நாளாகும்" என்று தெரிவித்தார்.
மாவட்ட வாரியாக வாக்காளர்கள் விவரம் (வரைவு)
மாவட்டம் | ஆண் வாக்காளர்கள் | பெண் வாக்காளர்கள் | மூன்றாம் பாலினத்தவர்கள் | மொத்த எண்ணிக்கை |
சென்னை | 19,01,911 | 19,65,149 | 1,118 | 38,68,178 |
காஞ்சிபுரம் | 6,44,802 | 6,79,597 | 182 | 13,24,581 |
செங்கல்பட்டு | 12,95,171 | 13,16,924 | 441 | 26,12,536 |
திருவள்ளூர் | 16,47,943 | 16,86,123 | 720 | 33,34,786 |
திருவண்ணாமலை | 10,06,658 | 10,46,842 | 118 | 20,53,618 |
வேலூர் | 6,08,639 | 6,48,515 | 162 | 12,57,316 |
விழுப்புரம் | 8,15,967 | 8,33,657 | 208 | 16,49,832 |
கள்ளக்குறிச்சி | 5,46,938 | 5,42,855 | 228 | 10,90,021 |
திருப்பத்தூர் | 4,59,945 | 4,72,743 | 118 | 9,32,806 |
இராணிப்பேட்டை | 4,97,721 | 5,24,542 | 91 | 10,22,354 |
அரியலூர் | 2,53,534 | 2,53,880 | 11 | 5,07,425 |
மயிலாடுதுறை | 3,65,735 | 3,72,128 | 20 | 7,37,883 |
நாகப்பட்டினம் | 2,65,472 | 2,75,926 | 24 | 5,41,422 |
பெரம்பலூர் | 2,76,491 | 2,86,000 | 8 | 5,62,499 |
புதுக்கோட்டை | 6,51,559 | 6,64,175 | 64 | 13,15,798 |
தஞ்சாவூர் | 9,74,896 | 10,25,988 | 156 | 20,01,040 |
திருச்சிராப்பள்ளி | 10,98,759 | 11,64,081 | 329 | 22,63,169 |
திருவாரூர் | 5,06,689 | 5,29,518 | 65 | 10,36,272 |
தருமபுரி | 6,21,822 | 6,05,319 | 161 | 12,27,302 |
திண்டுக்கல் | 8,95,483 | 9,45,135 | 213 | 18,40,831 |
கோயம்புத்தூர் | 14,96,770 | 15,51,665 | 569 | 30,49,004 |
கரூர் | 4,20,313 | 4,52,043 | 67 | 8,72,423 |
ஈரோடு | 9,45,487 | 10,01,239 | 160 | 19,46,886 |
கிருஷ்ணகிரி | 7,96,583 | 7,88,782 | 290 | 15,85,655 |
நாமக்கல் | 6,88,440 | 7,31,010 | 193 | 14,19,643 |
நீலகிரி | 2,74,005 | 2,96,610 | 17 | 5,70,632 |
சேலம் | 14,41,717 | 14,50,621 | 271 | 28,92,609 |
திருப்பூர் | 11,37,321 | 11,78,455 | 335 | 23,16,111 |
கன்னியாகுமரி | 7,61,833 | 7,60,063 | 140 | 15,02,236 |
மதுரை | 12,97,199 | 13,43,169 | 233 | 26,37,601 |
இராமநாதபுரம் | 5,73,462 | 5,78,771 | 69 | 11,52,302 |
சிவகங்கை | 5,73,291 | 5,93,318 | 51 | 11,66,660 |
தேனி | 5,39,512 | 5,61,903 | 193 | 11,01,608 |
தூத்துக்குடி | 6,97,945 | 7,26,593 | 210 | 14,24,748 |
திருநெல்வேலி | 6,69,490 | 6,99,096 | 132 | 13,68,718 |
தென்காசி | 6,38,731 | 6,64,176 | 155 | 13,03,062 |
விருதுநகர் | 7,48,446 | 7,81,860 | 230 | 15,30,536 |
மேலும் வயது வாரியாக, 40 முதல் 49 வயதிற்கு உட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். (1,37,63,488 வாக்காளர்கள்). 18 முதல் 19 வயது வரை உள்ள இளம் வாக்காளர்கள் 3,94,909 பேர்கள் உள்ளனர். 100 வயதை கடந்து இருக்கும் வாக்காளர்கள் 16,300 பேர்கள் உள்ளனர்.
அந்த வகையில் தமிழக்த்தில் மொத்தம் ஆண் வாக்காளர்கள் 3,00,68,610 பேர்கள், அதேப்போல் பெண் வாக்காளர்கள் 3,10,54,571 பேர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 8016 பேர்கள் என 6,11,31,197 வாக்காளர்கள் உள்ளதாக வரைவு வாக்காளா் பட்டியலில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.