ETV Bharat / state

ஜூலை 22-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்; ஆலோசனை செய்யப்படும் விவகாரங்கள் என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் விவகாரங்கள் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.

ஜூலை 22-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
ஜூலை 22-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
author img

By

Published : Jul 19, 2023, 8:35 PM IST

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை, ஆளுநரை திரும்பப்பெறுதல் போன்ற விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம்:- இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்.15ஆம் தேதி நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான பணிகளை அரசு வேகப்படுத்தியுள்ளது. சென்னையில் நாளை (ஜூலை20) இந்த திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பப் படிவம் நாளை முதல் வீடு வீடாக வழங்கப்படும் என்றும், தகுதியுடைய அனைவருக்கும் இந்த உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை:- கடந்த ஒரு மாத காலத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், தற்போது புழல் சிறையில் இருப்பதால் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரலமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது.

ஆளுநரை திரும்பப் பெறுதல்:- தமிழக அரசின் கொள்கைக்கும், கோட்பாட்டிற்கும் எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற கோருவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்கின்றனர். நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் ஆளுநரை திரும்பப் பெறக்கோரி அங்கு முழக்கம் எழுப்ப திமுக எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுநரை திரும்பப் பெறும் விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யவும் வாய்ப்புள்ளது.

மேலும் அத்தியவாசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்தும், ஜனவரியில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான ஒப்புதல் குறித்தும், சட்டப்பேரவையில் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க: கர்நாடக சபாநாயகர் மீது பேப்பர் வீசி பாஜக எம்.எல்.ஏக்கள் அமளி! 10 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.