சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜனவரி 4) சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்களும், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு அமைச்சரவையில் டிசம்பர் 14ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார்.
இதைத்தொடர்ந்து பல அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையில் கூட்டம் நடக்கிறது. அதோடு இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் வருகிற 9ஆம் தேதி கூடுகிறது. அப்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார்.
இந்த கூட்டத்தில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், மசோதாக்கள் குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பொங்கல் பரிசு பொருட்கள் தரமாக இருக்கும்' அமைச்சர் சக்கரபாணி