இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மதியழகன் உயிரிழந்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளார். அதில், "ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன், துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
தேசத்துக்காக உயிர் துறந்த அவருக்கு நம் வீர வணக்கங்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.