ETV Bharat / state

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் 'மோடி கிட்'

author img

By

Published : Apr 8, 2020, 8:36 PM IST

Updated : Apr 10, 2020, 10:02 AM IST

சென்னை: பாஜக தலைமை அலுவலகத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய 'மோடி கிட்' வழங்கினார்.

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் 'மோடி கிட்'
ஏழை மக்களுக்கு வழங்கப்படும் 'மோடி கிட்'

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த 27ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பாஜக நிர்வாகிகள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘மோடி கிட்’ என்ற பெயரில் அரிசி, எண்ணெய், பருப்பு, சர்க்கரை, கோதுமை ஆகிய பத்து வகை சமையல் பொருள்கள் அடங்கிய பையை ஆயிரத்து 500 பேருக்கு வழங்கியுள்ளோம். ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு மோடி கிட் வழங்கப்பட்டுள்ளன.

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் 'மோடி கிட்'

தமிழ்நாடு முழுவதும் சாலையோரம் வசிப்பவர்கள், ஆதரவற்றவர்கள், ஏழை மக்கள் என 10 லட்சம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளோம். மருத்துவ உபகரணங்கள், மாஸ்க், சானிடைசர், கையுறைகள் ஆகியவை இரண்டு லட்சம் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பாஜக சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஐந்து கோடி மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறோம். அனைத்து கிராமங்களுக்கும் மாஸ்க் தயாரித்து கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். பிரதமர் நிவாரண நிதிக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் 25 லட்சம் பேர் நிதி கொடுப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஒவ்வொரு நிர்வாகியும் நிதி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் 'மோடி கிட்'
கரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும். கரோனா வைரசை துரத்தி அடிப்பதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: அச்சுறுத்தும் கோவிட்-19, நெருங்கும் குளிர்காலப் பருவம்: விதை நிறுவனங்களின் கோரிக்கை!

Last Updated : Apr 10, 2020, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.