ETV Bharat / state

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு! - chennai news today

ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்ற வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ் உள்ளிட்ட தமிழ்நாடு வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

ஆசிய விளையாட்டு
ஆசிய விளையாட்டு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 6:18 PM IST

Updated : Oct 13, 2023, 9:59 AM IST

சென்னை: சீனாவின் ஹங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்தியா 107 பதக்கங்களுடன் 4வது இடம் பிடித்தது. இதில் 28 தங்கப்பதக்கங்களும் அடங்கும். இந்த ஆசியப் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் 8 பேர் கலந்து கொண்டனர்.

இதில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வித்யா ராம்ராஜ் 3 பதக்கங்களும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சுபா வெங்கடேசன் மற்றும் ராஜேஷ், வெள்ளிப் பதக்கமும், ட்ரிபிள் ஜம்பில் பிரவீன் வெண்கல பதக்கம் வென்றார். இதனையடுத்து பதக்கங்களுடன் சென்னை திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ”ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்றது பெறும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற நாடுகளில் சென்று விளையாடுவது ஒரு சிறந்த அனுபவத்தைத் தந்துள்ளது.

அடுத்த போட்டியில் பி.டி.உஷா சாதனையை முறியடிப்பேன். இந்தியாவில் அனைவரும் கிரிக்கெட்டுக்கு மட்டுமே ஆதரவு தெரிவிக்கின்றனர். தடகள போட்டிக்கு ஆதரவு அளிப்பது குறைவாகவே உள்ளது. எனவே தடகள போட்டிக்கும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

400மீ குழு ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற ராஜேஷ் ரமேஷ் பேசுகையில், “நாங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வோம் என நம்பிக்கையாக இருந்தோம். அதனால் ஆடவர் 400மீ குழு ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றோம். கலப்பு இரட்டையர் பிரிவில் பெஹ்ரைன் அணியினர் எங்களை விட நன்றாக ஓடினர். அதனால் எங்களால் தங்கம் வெல்ல முடியவில்லை”. எனக் கூறினார்

இதையும் படிங்க: Shubman Gill : அகமதாபாத்தில் சுப்மான் கில்! பாகிஸ்தான் ஆட்டத்தில் பங்கேற்பாரா?

Last Updated : Oct 13, 2023, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.