ETV Bharat / state

TN HSC Result: பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு.. எந்த மாவட்டம் முதலிடம்? எந்தெந்த இணையதளத்தில் பார்க்கலாம்? - tnresults

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வு முடிவுகள் மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மற்றும் முதல் முறையாக வாட்ஸ்அப் மூலமும் அனுப்பப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 8, 2023, 9:06 AM IST

Updated : May 8, 2023, 10:09 AM IST

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2022-2023 -ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத்தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதினர்.

இவர்களில் தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 மாணவர்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு 3,185 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது.

புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6 ஆயிரத்து 982 மாணவர்கள், 7,728 மாணவிகள் என 14 ஆயிரத்து 710 பேர் 40 தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தனித்தேர்வர்களாக 14 ஆயிரத்து 966 மாணவர்கள் எழுத 134 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க: பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட குழு.. 14417 என்ற உதவி எண் அறிவிப்பு!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலுடன் கூடிய தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம். மேலும் முதல் முறையாக மாணவர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு முடிவுகளுடன் சேர்த்து whatsapp எண்ணிற்கு உயர் கல்வி வழிகாட்டி குறித்த விழிப்புணர்வு அனுப்பப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை பொறுத்தவரையில், விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், திருப்பூர் இரண்டாம் இடத்தையும், பெரம்பலூர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இதையும் படிங்க: நீட் வினாத்தாள் எப்படி இருந்தது..? சென்னை மாணவர்கள் கருத்து!

Last Updated : May 8, 2023, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.