சென்னை: இதுகுறித்து உயர்கல்வித்துறைச்செயலாளர் கார்த்திகேயன் அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், உயர் கல்வித்துறையின்கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பாரதிதாசன், அன்னை தெரசா மகளிர் , பெரியார் பல்கலைக்கழகம் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பி.காம், பிபிஏ, பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு நடத்தப்படும் 2ஆம் ஆண்டு பருவத்தேர்வுகளில் தமிழ் மாெழிப்பாடத்திட்டம் இடம் பெறவில்லை.
எனவே, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றும் வகையில், இளநிலை பட்டப்படிப்புகளுக்கு நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு பருவத்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்திட்டத்தினை சேர்த்து, இனிவரும் காலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்து பல்கலைக்கழகப் பதிவாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுவரை இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி:அர்ச்சகர் மீது போலீசில் புகார்!