ETV Bharat / state

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் சாதனை நிகழ்த்திய ஜி.கே.மணியின் மகன்.. தேனாண்டாள் முரளி அணி முழு வெற்றி!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 2, 2023, 1:56 PM IST

சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் 2023-26 சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் கடந்த ஞாயிறன்று காலை 9.15 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பிரகாஷ் ராஜ், தேவயானி, ஏ.ஆர்.முருகதாஸ், அமீர், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், நாசர் உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி மற்றும் தயாரிப்பாளர் உரிமை காக்கும் அணி என இரண்டு அணிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மேலும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளி மற்றும் மன்னன் ஆகியோர் போட்டியிட்டனர். ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் தலைமையில் இந்த தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தலைவர், 2 துணைத் தலைவர்கள், செயலாளர், பொருளாளர், மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,406 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 1111 வாக்குகள் பதிவாகின. 300 வாக்குகள் பதிவாகவில்லை.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் 'நலம் காக்கும் அணி' சார்பில் தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதன்படி "நலம் காக்கும் அணி'' சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி ராமசாமி 615 வாக்குகளும், துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் 651 வாக்குகளும், அர்ச்சனா கல்பாத்தி 588 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்ட 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் 617 வாக்குகளும், ராதாகிருஷ்ணன் 503 வாக்குகளும், இவர்களை தொடர்ந்து பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சந்திர பிரகாஷ் ஜெயின் 535 வாக்குகளும், இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சௌந்தர் பாண்டியன் 511 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற நலம் காக்கும் அணியினருக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட லைகா நிறுவன தலைமை நிர்வாகி ஜி.கே.எம் தமிழ்குமரன் 651 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருப்பது இதுவரை நடைபெற்ற தேர்தலில் எந்த போட்டியாளரும் பெற்றிராத வாக்கு எண்ணிக்கையாகும். ஜி.கே.எம்.தமிழ்குமரன் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் ஆவார்.

தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட 'தேனாண்டாள்' முரளி ராமசாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக தலைவர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் பைவ் ஸ்டார் கதிரேசன் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: Maamannan: ரசிகர்களை மிரள வைத்த 'மாமன்னன்' போஸ்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.