ETV Bharat / state

சிவாஜி கணேசன் 96வது பிறந்தநாள்: திரைப் பிரபலங்களில் நெகிழ்ச்சி வீடியோ! - Ilayaraja

Sivaji Ganesan Birthday 96th Birthday: நடிகர் திலகம் சிவாஜி கனேசனின் 96 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களான இளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் சிவாஜி கணேசனுக்கு மரியாதை செலுத்தியதோடு சிவாஜியுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்துக்கொண்டனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 96வது பிறந்தநாள் - பிரபலங்கள் பலரும் வாழ்த்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 6:33 PM IST

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 96வது பிறந்தநாள் - பிரபலங்கள் பலரும் வாழ்த்து!

சென்னை: இந்திய சினிமாவின் நடிப்பு என்றாலே அது சிவாஜி கணேசன் தான். அத்தகைய சிறப்புகளை கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்று பிறந்தநாள். இதனையொட்டி திரை பிரபலங்கள் பலரும் அவருடனான தங்களது அனுபவங்கள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில்: நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன். நடிப்பாக அல்ல, வாழ்க்கையாகக் கலையை முன்வைத்தவர். உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில் என்று சொல்லத் தக்கவர், மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று. அவரை வாழ்த்துவது நமக்குப் பெருமை என்று தெரிவித்துள்ளார்.

கடலாக கடவுளாக கொண்டாடுபவர் நம் தேசத்தில் பிறந்ததே பெருமை: பார்த்திபன் பதிவிட்டுள்ளதாவது, “நடிப்புலகம் கண்டிராத புதுவகை இலக்கணம் வகுத்த நடிப்பை அறிமுகப்படுத்திய நடிகர் திலகத்தை அவரது தாய் தந்தை இவ்வுலகிற்கு ஆறிமுகப்படுத்திய தினமின்று. அவரது நடிப்பின் சாயல் இன்றி எவரது நடிப்பும் இல்லை என்பது உலகறிந்த செய்தி. ஆனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ நான் நடித்த போது அச்சாயலும் எச்சாயமும் வரக்கூடாது என்பதில் கவனம் செலுத்த இராஜராஐசோழன் உட்பட அவரது சில படங்களை பலமுறை பார்க்கும் பாக்கியம் பெற்றேன்.

சிவாஜி சாரின் சாயலும் சிவாஜி ராவின் சாயலும் (சந்திரமுகி-2) யாரும் தொடுவது சுலபமல்ல. Style icon-ஆக நாம் ரஜனி சாரை பார்க்க, அவரோ ஒரு பேட்டியில் தமிழ் படவுலகின் முதல் Style icon-ஏ சிவாஜி சார் தான் என பெருமையாகக் கூறியுள்ளார்.நேற்றைய, இன்றைய மட்டுமல்ல நாளைய நடிகர்களும் பெருமையாக, பொறாமையாக கடலாக கடவுளாக கொண்டாடுபவர் நம் தேசத்தில் பிறந்ததே பெருமை. ஜெய்ஷிந்த்.! இவ்வார்த்தையை தன் சிம்மக்குரலில் பதிவு செய்தே தன் பேச்சை நிறைவு செய்வார் நடிகர் திலகம் An Incomparable acting universe ”என்று தெரிவித்துள்ளார்.

பரிபூரண ஆசி கலையுலகம் மீது எப்போதும் இருக்கும்: இசை அமைப்பாளர் இளையராஜா பதிவிட்டுள்ள வீடியோவில், கலைத்தாயின் தவப் புதல்வன் அண்ணன் நடிகர் திலகத்திற்கு இன்று பிறந்த நாள். இந்த நாளை உலகமே கொண்டாடுகிறது. அவரது பாத கமலங்களை தொட்டு அங்கேயே தலையை கிடத்தி வீழ்ந்து நமஸ்காரம் செய்வதிலும் நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்ற மகிழ்ச்சி எனக்கு இருக்கிறது. அண்ணனின் புகழ் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. அவரது பரிபூரண ஆசி என்மீதும் கலையுலகம் மீதும் எப்போதும் இருக்கும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் சங்கத்தின் சார்பில் சிவாஜி கணேசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதுகுறித்து நடிகர் சங்கத்தினர் கூறியதாவது, “தமிழ் சினிமாவின் பெருமையும் நமது தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தளபதி தினேஷ், பிரகாஷ், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘பதானை’ மிஞ்சிய ‘ஜவான்’ - பாக்ஸ் ஆபிஸ் கிங் ஷாருக்கானின் புதிய சாதனை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.