கடந்த சில நாள்களுக்கு முன்பு தாம்பரம் நகராட்சிக்குச் சொந்தமான பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆக்கிரமித்து நடத்திவந்த பழக் கடை, பூக்கடை ,காய்கறி கடை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கடைகளை நகராட்சி அலுவலர்கள் மாற்று இடம் அறிவிக்காமல் அகற்றினார்கள்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி நகராட்சி அலுவலர்கள் நடைபாதை கடைகளை அகற்றவில்லை எனவும் மாற்று இடம் தராமல் கடைகளை அகற்றியதால் தங்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாகக் கூறி தாம்பரம் நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் கருணாநிதி தலைமையில் தாம்பரம் சிறு வியாபாரிகள் 50 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நகராட்சி ஆனையர் கருப்பையா வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் வரும் திங்கட்கிழமை அன்று மாற்று இடம் குறித்து பரிசீலினை செய்யபடும் என்று உறுதி அளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி வளாகத்தில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: