சென்னை, கிழக்கு தாம்பரத்தில் கார்லி சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேவாலயம் ஒன்று உள்ளது. கடந்த இரண்டு நாள்களாக இந்தப் பள்ளி வளாகத்தில் வாக்காளர் சரிபார்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இச்சூழலில் தேவாலயத்தின் வெளியே இருந்த பைபிள் வைக்கபட்டிருந்த கண்ணாடிப் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கைப் பணம் திருடப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தேவாலய நிர்வாகிகள் சேலையூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், காணிக்கைப் பணத்தை திருடிச் சென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 100 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தில் இதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை என்றும், உடனடியாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் தேவாலய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க... பெரமணூர் மாரியம்மன் கோயில் உண்டியல் உடைப்பு!