சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
வாக்காளர்களைக் கவர தோசை சுடுவது, பரோட்டா போடுவது எனப் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வாக்குச் சேகரித்துவருகின்றனர்.
இந்தநிலையில், தாம்பரம் மாநகராட்சி 60ஆவது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் வழக்கறிஞர் லட்சுமி ராஜா காதலர் நாளான இன்று (பிப்ரவரி 14) மங்களபுரம் பகுதியிலுள்ள வாக்காளர்களிடம் ரோஜா பூ கொடுத்து பரப்புரை மேற்கொண்டார்.
நீர் குழாய் சின்னத்தில் போட்டியிடும் தனக்குப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு அப்பகுதி மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
ரோஜா பூ கொடுத்து வேட்பாளர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டது அப்பகுதி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இதையும் படிங்க: தமிழ்த் திரை காதல் ஜோடிகளின் திருமணத் தருணங்கள்