ETV Bharat / state

'வேலையில்லா பட்டதாரி' பட வழக்கு - புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் புகையிலை பொருள்கள் விளம்பரப்படுத்தல் தடை சட்ட விதிகளை மீறல் தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலையில்லா பட்டதாரி
வேலையில்லா பட்டதாரி
author img

By

Published : Oct 29, 2021, 1:54 PM IST

நடிகர் தனுஷ் தயாரித்து, நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது. அதில் சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைந்திருந்தன. மேலும் படத்தில் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சிகளில் திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை.

இதனையொட்டி படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககோரி அரசுக்கும், சென்சார் போர்டுக்கும், தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று (அக்.29) விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்த பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், ஆட்சேபத்துக்குரிய பேனர்கள் நீக்கப்பட்டு விட்டதாகவும் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் தரப்பிலும், சென்சார் போர்டு தரப்பிலும், "சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட போஸ்டர்கள் சினிமோட்டோகிராப் சட்டத்தின் கீழ் வராது என்பதால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. சிகரெட், புகையிலை விளம்பரப்படுத்தல் தடை, முறைப்படுத்தல் சட்டப்படி அமைக்கப்பட்ட குழு மூலம் தனுஷ், இயக்குநர் வேல்ராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் நடவடிக்கையை தொடரவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியும், மேற்கொண்டு எந்தத் தவறும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் வொண்டர்பார் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "புகையிலை மிக மோசமான சுகாதார பாதிப்பு தரும் பொருள் எனக் கருதப்படுவதாகவும், புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை, பாதிப்பு இந்தியாவுக்கு ஆண்டுக்கு 13,500 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

மேலும் இந்த விவகாரம் தொடராக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரதுறை இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. புகையிலை சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள குழுவில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்பி, புகார்கள் மீது எந்த தாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறு" உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: 'அண்ணாத்த படத்தை இணையதளங்களில் வெளியிட தடை' - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.