கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசு அறிவுறுத்தியுள்ளது.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றாத கடைகள், வணிக வளாகங்கள் மீது மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தும் சீல் வைத்தும் வருகின்றனர்.
இந்நிலையில் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்றவில்லை எனக் கூறி தி.நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், "கடைக்குள் சமூக இடைவெளி பின்பற்றவில்லை, முகக்கவசம் சரிவர யாரும் அணியவில்லை. இதன் காரணமாக குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் வைத்தோம். மேலும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தனி மனித இடைவெளியைப் பின்பற்றாத ஆவண எழுத்தர் அலுவலகம் சீல்!