ETV Bharat / state

இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது 35 இடங்களில் சூர்யா ரசிகர் மன்றத்தினர் புகார்! - surya arjun sampath controversy

சென்னை: நடிகர் சூர்யாவை செருப்பால் அடிப்பவருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கபடும் என கூறிய இந்து மக்கள் கட்சியின் துணை பொதுசெயலாளர் தர்மா மீது சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

Surya fans complaint  சூர்யா ரசிகர் மன்றப்புகார்  இந்துமக்கள் கட்சி சூர்யா சர்ச்சை  hindu makkal katchi  surya arjun sampath controversy  surya fans complaint
இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது 35 இடங்களில் சூர்யா ரசிகர் மன்றத்தினர் புகார்
author img

By

Published : Sep 22, 2020, 5:42 PM IST

நீட் தேர்வினால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் நீட் தேர்வை எதிர்த்து அகரம் அறக்கட்டளை நிறுவனரும், நடிகருமான சூர்யா நீட் தேர்வு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி இந்து மக்கள் கட்சியின் துணை பொதுசெயலாளர் தர்மா சூர்யாவின் உருவ படத்தை எரித்தும், திண்டுக்கலில் நடைபெற்ற கூட்டத்தின் போது சூர்யாவை செருப்பால் அடிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

சூர்யா ரசிகர் மன்ற மாநில அமைப்பாளர் சுந்தர் பேட்டி

இதேபோல் இயக்குநர் ஆகாஷ் பிரபாகர் சமூக வலைதளங்களில் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பல மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வரும் நடிகர் சூர்யாவை இழிவுபடுத்தி பேசிய இந்து மக்கள் கட்சி துணை பொதுசெயலாளர் தர்மா மற்றும் இயக்குனர் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூர்யா ரசிகர் மன்றத்தினர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இதே போல் தமிழ்நாடு முழுவதும் 35 இடங்களில் சூர்யா ரசிகர் மன்றத்தினர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்

இதையும் படிங்க: 'பால் குடிக்கும் குழந்தை சூர்யா' - ராதாரவி கிண்டல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.