ETV Bharat / state

"காப்பான்" சூர்யாவின் பிறந்தநாள் இன்று! - நடிகர்

சென்னை: 'நேருக்கு நேர்' படத்தில் தொடங்கி 'காப்பான்' வரை நீண்டகாலமாக திரைத்துறையில் பயணிக்கும் சூர்யா இன்று 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

"காப்பான்" சூர்யாவின் பிறந்தநாள் இன்று!
author img

By

Published : Jul 23, 2019, 12:27 PM IST

Updated : Jul 23, 2019, 2:35 PM IST

வெற்றியை ஒருவரின் பிறப்பு மட்டும் தீர்மானிப்பதில்லை. உழைப்பு தான் தீர்மானிக்கிறது என்று அவர் எழுதிய வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறார் சூர்யா. நடிக்கும் படத்தில் மட்டும் ’அஞ்சான்’ அல்ல, நிஜவாழ்விலும் அஞ்சான்தான்.

திரையுலகப் பயணம்:

கேள்விகள் கேக்க தயங்காதவர் இவர். காப்பானில் இருந்து மக்களை காக்கவும் தொடங்கியிருக்கிறார்.

சென்னை
"காப்பான்" சூர்யாவின் பிறந்தநாள் இன்று!

ஜூலை 23, 1975ஆம் ஆண்டு சென்னையில் நடிகர் சிவகுமாருக்கு மூத்த மகனாக பிறந்த இவர், தனது பள்ளி வாழ்க்கையை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் தொடங்கினார். லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

ஓர் தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்த சூர்யா தற்போது கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். அவர் வருமானம் மாறினாலும் அவரின் மனம் மாறவேயில்லை.

’நேருக்கு நேர்’ தொடங்கி ’ப்ரண்ட்ஸ்’ படம் மூலம் சிறந்த நடிகனாக அங்கீகரிக்கப்பட்டு, 2001ஆம் ஆண்டு வெளியான ’நந்தா’ படம் மூலம் தமிழ்நாடு மாநில அரசின் விருதைப் பெற்று முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

பின்பு 2003ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ’காக்க காக்க’ திரைப்படம் இவரை மாஸ் ஹீரோ பட்டியலில் சேர்த்தது.

’பிதாமகன்’, ’பேரழகன்’ போன்று பல படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மக்கள் மனதில் தனது பெயரை நிலைநாட்டினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான ’கஜினி’ திரைப்படம் இவரை பெண் ரசிகைகளின் கனவு நாயகனாக மாற்றியது, தனக்கென ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கினார்.

சென்னை
"காப்பான்" சூர்யாவின் பிறந்தநாள் இன்று!

ஜில்லுனு ஒரு காதல் (2006), வேல் (2007), வாரணம் ஆயிரம் (2008), அயன் (2009), என தொடர்ச்சியான வெற்றி இவரை தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக மாற்றியது.

சிக்ஸ் பேக்ஸ் வைத்து நடிகர்களுக்கான உடற்கூறு கோட்பாட்டை அறிமுகம் செய்து வைத்த கிளாஸ் ஹீரோவும் இவர்தான். பிடித்தமான போலீஸ் கதாபாத்திரம் என்றால் துரைசிங்கம்தான் என்று மார்தட்டி சொல்லும் மாஸ் ஹீரோவும் இவர்தான்.

அஞ்சான் படத்தில் இவரின் பஞ்ச் வசனங்கள் அவர் ரசிகர்களுக்கு மறக்கமுடியததாக அமைந்தது.

சென்னை
"காப்பான்" சூர்யாவின் பிறந்தநாள் இன்று!

மாஸ் ஹீரோவாக மட்டுமே நடித்த சூர்யா தன்னால் வில்லனாகவும் நடிக்க முடியுமென நடித்துக்காட்டிய மெகாஹிட் படம் தான் ’24’ இதில் அவர் ஆத்திரேயடா என்பது ரசிகர்களை மிரள வைத்தது.

வாழ்க்கைப் பயணம்:

’பூவெல்லாம் கேட்டுப்பார்’, ’உயிரிலே கலந்தது’ போன்ற படங்களில் சேர்ந்து நடித்த ஜோதிகாவை காதல் திருமணம் செய்துகொண்டார். சூர்யாவிற்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளன.

’தானா சேர்ந்த கூட்டம்’ , என்.ஜி.கே போன்ற சமூக அக்கறை கொண்ட நாயகனாக திரையில் மட்டுமே காட்டிக்கொள்வதில்லை. அகரம் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவி, பொது சேவைக்காகவும் பாதியில் பள்ளிப்படிப்பை விட்ட ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் தொண்டாற்றி வருகிறார்.

சென்னை
"காப்பான்" சூர்யாவின் பிறந்தநாள் இன்று!

ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது இவரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்துகிறது. சமூக அக்கறை கொண்ட நடிகர் இவர் என சக திரை நடிகர்களும் இவரை பாராட்டுவதுண்டு.

கல்விக்கு ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்ற இவரின் ஆழமான கருத்து, அவரின் ரசிகனாக இருந்தால் மட்டும் புரியுமென்று இல்லை. கல்வியை மதிக்கும் ஒவ்வொருவரும் இவரின் கருத்துக்கு தலை வணங்குவர். மாற்றம் கல்வியில் உள்ளது என்பதை அறிந்த நடிகர் மட்டும் அல்ல அவர், பல குழந்தைகளின் கல்விக்கு இன்றுவரை உதவிக்கொண்டிருக்கும் மனிதர் அவர். நடிகர் என்ற பெயர் நடித்தால் மட்டுமே வரும், ஆனால் மனிதன் என்ற பெயர் உதவும் உள்ளதினால் வரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

சென்னை
"காப்பான்" சூர்யாவின் பிறந்தநாள் இன்று!

சமமான கல்வி என்பது இவரின் வாய்ச்சொல் மட்டும் அல்ல என்பதற்கு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை விமர்சித்தது ஆதாரமாகும்.

பலதரப்பில் இருந்து இவரின் விமர்சனத்திற்கு எதிர்ப்புகள் வந்தாலும், நடிகனாக அல்ல ஒரு இந்திய குடிமகனாக இருந்தாலும் நான் இதை கூறியிருப்பேன் எனக் கூறிய இவரின் வார்த்தைகளுக்கு தலை வணங்கியது திரையுலகமும் சமூகமும்.

சமீபத்தில் ’காப்பான்’ இசைவெளியீட்டு விழாவில் இவரின் கருத்துகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து, ஏழை மாணவர்களின் கஷ்டங்களை நேரில் கண்டவர் சூர்யா, அவரது கருத்து பிரதமர் மோடிக்கு எட்டிவிட்டது என கூறினார்.

நாம் எடுக்கும் முயற்சிகள் எப்போதும் தவறலாம். ஆனால், விடாமுயற்சியை எப்போதுமே தவறவிடக் கூடாது என்பதை நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன். என்னுடைய நிஜ வாழ்வில் நான்கு பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் என்று கூறிய இந்த நாயகனின் வார்த்தைகளில் அர்த்தம் உண்டு.

அவரின் ரசிகன் என்றால் இந்நேரம் கிளம்பியிருப்பான் ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்ய, கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் சூர்யாவின் 44ஆவது பிறந்தநாள் இன்று.

அவரின் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 23, 2019, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.