தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுகவிற்கு அதன் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் தேர்தலில் ஆதரவு தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
புதிய நீதிக் கட்சி
புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் தலைமையில், அந்தக்கட்சியின் நிர்வாகிகளான, செயல் தலைவர் ரவிகுமார், பொதுச் செயலாளர் பழனியப்பன், பொருளாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் அதிமுக தலைவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். கடந்த மக்களவை தேர்தலில் ஏசி சண்முகம் வேலூரில் போட்டியிட்டார்.
முத்தரையர் ஆதரவு
தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்றச் சங்கம் சார்பில் வலையர் வாழ்வுரிமை மாநாடு சங்கத்தின் நிறுவனத் தலைவர் செல்வகுமார் தலைமையில் மதுரை ஒத்தக்கடையில் (ஜன.31) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், வீர முத்திரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் செல்வகுமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளான, கொள்கை பரப்புச் செயலாளர் தளவாய் ராஜேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன், வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் வழக்கறிஞர் சிவநேசன், மத்திய மண்டல பொருப்பாளர் குணா ஆகியோரும் ஆதரவு அளித்தனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளான, அமைப்புச் செயலாளர் சேலம் செல்லப்பன், மாநில செயலாளர் ஆசைதம்பி, துணைத் தலைவர் குருசாமி, குமரி மண்டல தலைவர் குமரி அன்புகிருஷ்ணன் ஆகியோரும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட என்.ஆர். தனபாலன் தோல்வியை தழுவினார்.
தமிழ் மாநில முஸ்லீம் லீக்
தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் தலைமையில், அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் முகமது மஸ்தான், தலைமை நிலையச் செயலாளர் ஜாகிர் உசேன், மாநில ஒருங்கிணைப்பாளர் முகம்மது சயபுதீன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் விஜய் ஆனந்த் ஆகியோரும், இந்திய தேசிய குடியரசு கட்சியின் நிறுவனத் தலைவர் அம்பேத்கர் பிரியன் தலைமையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் குழந்தைவேலு, செயலாளர் மெய்யழகன் ஆகியோரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் என். சேதுராமன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளான, பொதுச் செயலாளர் தேவர், பொருளாளர் பாண்டியன், இணை பொதுச் செயலாளர்களான பிரபு, செந்தூர்பாண்டியன், மதுரை மாவட்டச் செயலாளர் பகவதி, இளைஞர் அணி தலைவர் பெரியதுரை ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர்.
பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் முருகன் ஜீ தலைமையில், அக்கட்சியின் இளைஞர் அணி மாநில அமைப்பாளர் லட்சுமணன், உயர்மட்டக் குழு உறுப்பினர் ஐயம்செழியன் ஆகியோரும் ஆதரவு அளித்தனர்.
இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் தலைமையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் வேட்டை ரங்கநாதன், மாவட்டச் செயலாளர் ரமேஷ்பாபு, நிதி காப்பாளர் ஹரிஹரன், மாவட்டத் தலைவர் மாணிக்கசாமி, இளைஞர் அணியைச் சேர்ந்த பத்மநாபன் ஆகியோரும் ஆதரவு அளித்தனர்.
தமிழ் தெலுங்கு எல்லாமும் அதிமுகவிற்கு
தமிழ் தெலுங்கு தேசியக் கட்சியின் நிறுவனர் ராஜகுமார் நாயுடு நேரில் சந்தித்து, அதிமுகவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம், ஆகியோரும் உடன் இருந்தனர்.