ETV Bharat / state

சுகேஷ் சந்திரசேகர் கோடிகளை சம்பாதித்து குவித்ததின் பின்னணி என்ன? - etv bharat

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சுகேஷ் சந்திரசேகர் கோடிகளை சம்பாதித்து குவித்ததின் பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

சுகேஷ் சந்திரசேகர் சொத்துக்கள்
சுகேஷ் சந்திரசேகர் சொத்துக்கள்
author img

By

Published : Aug 25, 2021, 8:28 PM IST

Updated : Aug 25, 2021, 10:22 PM IST

சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டி.டி.வி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக 2017ஆம் ஆண்டு கைதான சுகேஷ் சந்திரசேகர், பல ஒப்பந்தங்களை முடித்து கொடுப்பதாகப்பேசி டெல்லி தொழிலதிபர்களிடம் ரூ.200 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.

இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானாத்தூரில் சுகேஷ் சந்திரசேகருக்குச் சொந்தமான பங்களாவில் டெல்லி அமலாக்கத்துறையினர் 7 நாட்கள் சோதனை நடத்தினர்.

இதில் உரிய ஆவணங்கள் இல்லாத 16 சொகுசு கார்கள், 2 கிலோ தங்கம், கணக்கில் வராத 82 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்ததோடு, பங்களாவுக்கு சீல் வைத்தனர்.

ஏமாற்றுவதை விடவில்லை

சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபோதும் ஏமாற்றுவதை விடவில்லை என்று டெல்லி அமலாக்கத்துறை தகவல் கூறியுள்ளது.

இதனிடையே சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரை காவலில் எடுத்து, நேரில் அழைத்து வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது 32 வயதாகும் சுகேஷ், 2007ஆம் ஆண்டு அவருக்கு 17 வயதாக இருந்தபோது பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டார்.

முன்னாள் கர்நாடக முதலமைச்சரின் மகனுக்கு தான் நெருங்கிய நண்பர் எனக் காட்டி கொண்ட சுகேஷ், முதன்முதலில் 85 வயது முதியவரிடமிருந்து ரூ.1.14 கோடி பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் எச்.பி.ஆர் லே அவுட் என்ற இடத்தில் இருந்த 7,200 சதுர அடி நிலத்தை அவருக்குப் பெற்றுக் கொடுத்தார். இது முதல் சுகேஷ், படிப்படியாக மோசடியில் ஈடுபடத் தொடங்கினார்.

ஐஏஎஸ் போல் நடிப்பு

கடந்த 2013ஆம் ஆண்டு, தனது மனைவியான நடிகை லீனா மரியா பால் என்பவருடன் இணைந்து ஐஏஎஸ் அலுவலர்போல் நடித்து, சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றிலிருந்து ரூ.13 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சிறைக்குச் சென்று வந்தார்.

இதனைத்தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் மோசடி வழக்கில், சிக்கியபோது மிகப்பெரிய தொழிலதிபர்களை குறிவைத்து, பல கோடி ரூபாய் பெற்றது விசாரணையில் தெரிந்தது.

இதுமட்டுமின்றி சொகுசு கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவரான சுகேஷ் சந்திரசேகர் ஒப்பந்தங்களை முடித்து கொடுத்தவுடன், அவர்களிடமிருந்த சொகுசு கார்களை பெறுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

லீனா மரியா பால் வீட்டில் சோதனை

சுகேஷ் சந்திரசேகர் சொத்துகள்

சுகேஷ் சந்திரசேகர் மீது டெல்லி அமலாக்கத்துறையினர் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் மனைவியான லீனா மரியா பால் வீட்டில் சோதனை நடைபெற்றது. சென்னை கானாத்தூரில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமாக கடற்கரை அருகே ஆடம்பர பங்களா ஒன்று இருப்பது தெரியவந்தது.

அந்த பங்களாவில் விலையுயர்ந்த சொகுசு கார்களான BMW, Benz, range rover என பிரமிக்க வைக்கும் அளவில் 16 கார்கள் இருந்துள்ளன. இதுமட்டுமின்றி சினிமா படப்படிப்புகளில் பயன்படுத்தப்பட்ட சொகுசு கேரவன் ஒன்றையும் அந்த பங்களாவில் சுகேஷ் சந்திரசேகர் வைத்துள்ளார்.

விலையுயர்ந்த கார்

பல கோடி மதிப்பில் இத்தாலி மார்பிள் கல்லில் கட்டப்பட்டுள்ள அந்த ஆடம்பர பங்களாவில் விலையுயர்ந்த மின்விளக்குகள், 1955ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விலையுயர்ந்த mercedes benz 300 SLR 722 காரை வீட்டின் நடுவில் பொருத்தி அலங்கரித்துள்ளது கண்ணைக் கவரும் அளவிற்கு இருந்துள்ளது.

இதனால் அமலாக்கத்துறையினர் அந்த காரை எடுக்க முடியாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் வீட்டில் விலையுயர்ந்த ஏராளமான லெதர் காலணிகள், பெல்ட், துணிமணிகள் என அசரவைக்கும் வகையில் இருந்துள்ளது.

இதையும் படிங்க: போலி சான்றிதழ் வழங்கி சுகாதாரப் பணியில் சேர்ந்தவர்கள் மீது புகார்

Last Updated : Aug 25, 2021, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.