சென்னை திருவல்லிக்கேணி எஸ்.எம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சி நாதன் (17). இவர் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு வராததால் இவரது தந்தை சிகாமணி தனது மகள்களிடம் காஞ்சிநாதனை தேடி அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில், தேடும் போது எஸ்.எம் நகர் மேம்பாலம் அருகே கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பின்னர் காஞ்சிநாதனை சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரது தந்தையிடம் விசாரித்தனர். அப்போது மதுபோதையில் அடிக்கடி எங்களை அச்சுறுத்த தன் கழுத்தை தானே அறுத்துக்கொள்வேன் என அவர் கூறுவார் என்றும், அதேபோல் இன்றும் நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மின்சார ஆட்டோ பயன்பாட்டை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!