ETV Bharat / state

நடிகை சுசித்ரா மனநல மருத்துவமனையில் அனுமதி! - kollywood latest news

சென்னை: நான்கு நாட்களுக்கு முன்பு காணமால் போன சுச்சி லீக்ஸ் புகழ் சுசித்ரா, தியாகராய நகரிலுள்ள விடுதியொன்றில் மீட்கப்பட்டு தற்போது கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

suchi leaks sujithra
author img

By

Published : Nov 14, 2019, 7:26 PM IST

சுச்சி லீக்ஸ் மூலம் பிரபலம் அடைந்த சுசித்ரா(39), தனது கணவர் நடிகர் கார்த்திகுமாருடன் விவகாரத்தாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அடையார் காந்தி நகர் பகுதியில் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக தனது அக்கா சுசித்ராவை காணவில்லை என திருவான்மியூரில் வசிக்கும் அவரது தங்கை சுஜிதா அடையாறு காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவலர்கள், சுசித்ராவின் செல்ஃபோன் எண்ணை வைத்து அவரைத் தேடி வந்தனர். அவரது செல்ஃபோன் எண் தியாகராய நகரில் உள்ள ஒரு விடுதியில் இயங்குவதாக கண்டறிந்த காவலர்கள், அந்த விடுதிக்குச் சென்று அவரை மீட்டனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தனது வீட்டில் உள்ள நபர்கள் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் வெளி உலகத்திற்கு காட்ட முயற்சிப்பதாகவும் அதனால் தான் மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டிலிருந்து தப்பித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுதித்ராவை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையும் படிங்க: பரதநாட்டியத்தைத் தொடர்ந்து தமிழ்: கங்கனாவின் தொடர் முயற்சி!

Intro:Body:நடிகை சுஜித்ரா மனநல மருத்துவமனையில் அனுமதி..

சுச்சி லீக்ஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் சுசித்ரா(39).இவரது கணவர் பிரபல நடிகர் கார்த்திகுமாருடன் விவகாரத்தாகி 2 வருடம் ஆகிறது.இவர் சென்னை அடையார் காந்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்..இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தனது அக்கா சுசித்ராவை காணவில்லை என திருவான்மியூரில் வசிக்கும் தங்கை சுஜிதா அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சுசித்ராவின் செல்போன் எண்ணை வைத்து போலிசார் விசாரணை செய்தனர்.அப்போது சுஜித்ராவின் எண் தி.நகரில் உள்ள விடுதியில் காண்பிப்பதாக போலிசார் கண்டறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.பின்னர் அங்கிருந்த சுஜித்ராவை போலிசார் மீட்டனர். பின்னர் சுஜித்ராவிடம் நடத்திய விசாரணையில் தனது வீட்டில் உள்ள நபர்கள் தன்னை மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் வெளிஉலகத்திற்கு காட்ட முயற்சிப்பதாக சுஜித்ரா தெரிவித்தார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டிலிருந்து தப்பித்து வந்ததாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சுஜித்ராவை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.