ETV Bharat / state

'நடிகர் கமல் ஒரு முட்டாள், நடிகர் விஜய் வழக்குத் தொடரலாம்'- அதிரடி சுப்பிரமணியன் சுவாமி

சென்னை: பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அரசியல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு காரசாரமான பதில்களைக் கூறினார்.

Subramanian Swamy press meet in chennai airport

author img

By

Published : Feb 7, 2020, 8:12 PM IST

பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது அரசியல் தொடர்பான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அப்போது ரஜினி பாஜகவில் இணைவது தொடர்பான கேள்விக்கு, ரஜினிகாந்த் பாஜகவில் இணைவதற்கு அவர் தான் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

மேலும் ரஜினி இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்காக பேசினால் அவருக்குத்தான் ஆதரவு கொடுப்பதாகவும் தெரிவித்தார். ரஜினி பாஜகவில் இணைந்தால் தான் எதிர்க்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து கேட்டதற்கு, அவருக்கு அநியாயம் நடந்திருந்தால் அவர் வழக்குத் தொடரலாம் என பதிலளித்தார்.

மத்திய பட்ஜெட் குறித்து கேட்கப்பட்டபோது தான் இன்னும் பட்ஜெட்டை படிக்கவில்லை என்றும்; படித்த பிறகு கருத்து தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் ராமர் கோயில் கட்டுவதற்கும் சோனியா காந்தியையும், ப. சிதம்பரத்தையும் சிறைக்கு அனுப்புவதற்கான வேலைகளில் தீவிரமாக இருப்பதால் பட்ஜெட் குறித்து தான் படிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா எப்போது கைது செய்யப்படுவார் என கேட்கப்பட்ட கேள்விக்கு, மல்லையா, நிரவ் மோடி ஆகியோர் கூட வெளிநாடு தப்பி ஓடி உள்ளனர் என பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, தன் கையில் ஒன்றும் இல்லை எனவும்; தனக்கு மத்திய நிதியமைச்சர் பதவி கொடுத்தால் கண்டுபிடித்துக் கொடுப்பேன் எனவும் கேலியாகப் பதிலளித்தார்.

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி

வரும் 2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டபேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் தொடங்குவது பற்றி கேட்கப்பட்டதற்கு, கமலஹாசன் ஒரு முட்டாள் என்றும், அனைவரும் அவரை அப்படித்தான் பார்க்கிறார்கள், அவர் குறித்து பதில் கூற விருப்பமில்லை எனவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏழு பேர் விடுதலை... ஆளுநர் அலுவலகம் கண்ணாமூச்சி விளையாடுகின்றன - பாலகிருஷ்ணன்

Intro:பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி.

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைவதற்கு ரஜினிகாந்த் தான் தயாராக இருக்க வேண்டும் அவர் இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்காக பேசினால் அவருக்கு நான் ஆதரவு கொடுப்பேன். ரஜினி பாஜகவில் இணைந்தால் நான் எதிர்க்க மாட்டேன் ஆனால் அவர் சினிமாவுக்கு சென்றால் நான் எதிர்ப்பேன்.

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றி கேட்டதற்கு

அவருக்கு அநியாயம் நடந்திருந்தால் அவர் வழக்கு தொடரலாம் என கூறினார்.

மத்திய பட்ஜெட் பற்றி இன்னும் நான் படிக்கவில்லை படித்த பிறகு சொல்கிறேன்.

ராமன் கோயில் கட்டுவதற்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் பா சிதம்பரத்தை சிறைக்கு அனுப்புவதற்கான வேலைகளை செய்து வருகிறேன். மத்திய பட்ஜெட்டை படித்த பிறகு சொல்கிறேன்.

ராமர் கோவில் அறக்கட்டளையில் உறுப்பினராக நான் இல்லை. நான் ஒரு அரசியல்வாதி என் பெயர் மட்டும்தான் சாமி நான் சாமியார் இல்லை.

நித்தியானந்தா தலைமறைவாக இருக்கிறார் அவர் எப்போது கைது செய்யப்படுவார் என கேட்கப்பட்ட கேள்விக்கு

மல்லையா,நீரோ மோடி ஆகியோர் கூட வெளிநாடு தப்பி ஓடி உள்ளனர் என் கையில் ஒன்றும் இல்லை எனக்கு மத்திய நிதியமைச்சர் பதவி கொடுத்தால் கண்டுபிடித்து கொடுப்பேன் என்றார்.

வருகிற 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் தொடங்குகிறார் இதைப் பற்றி கேட்டதற்கு

கமலஹாசன் ஒரு முட்டாள் அனைவரும் அவரை அப்படித்தான் பார்க்கிறார்கள். அவரைப் பற்றி பதில் கூற விருப்பமில்லை

தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார் என்று பிறகு சொல்கிறேன் இப்போதே சொல்லிவிட்டால் அனைவரும் எனக்கு எதிரி ஆகிவிடுவார்கள்

தண்டனைகள் முடிந்த பிறகு சசிகலா வெளியே வந்தால் அவர் புதிய பாதைக்கு செல்ல நான் உதவி செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.