ETV Bharat / state

‘உங்கள் மருமகளை வரவேற்க இன்னொருவர் மகளைக் கொன்றுள்ளீர்கள்’ - ஜெயகோபாலுக்கு நீதிமன்றம் கண்டனம் - roadside banner tamilnadu

சென்னை: பேனர் சரிந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் ஜாமீன் கோரிய ஜெயகோபாலுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

subashree
author img

By

Published : Oct 15, 2019, 3:50 PM IST

Updated : Oct 15, 2019, 4:01 PM IST

பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 27ஆம் தேதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 12 நாட்களாக சிறையில் இருக்கும் இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தனது மகனின் திருமண வரவேற்புக்காக பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, ‘உங்கள் மருமகளை வரவேற்க இன்னொருவர் மகளைக் கொன்றுள்ளீர்கள்’ என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஏன் இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தீர்கள் என ஜெயகோபால் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெயகோபால் தரப்பில், விபத்து நடத்த பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்கட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு குறித்து பதில்மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை அக்டோபர் 17ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: ‘என் மகளின் இறப்பிற்குக் காரணமானவர்களைப் பணிநீக்கம் செய்க!’ - சுபஸ்ரீ தந்தை ஆவேசம்

Intro:Body:உங்கள் மகளை வரவேற்க இன்னோரு மகளை கொன்றுள்ளீர்கள் என ஜெயகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது..

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெயகோபால் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த 27ம் தேதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 12 நாட்களாக சிறையில் இருக்கும் இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தனது மகனின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது..

அப்போது,உங்கள் மகளை வரவேற்க இன்னோரு மகளை கொன்றுள்ளீர்கள் என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஏன் இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தீர்கள் என ஜெயகோபால் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஜெயகோபால் தரப்பில், விபத்து நடத்த பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்கட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது..

இதனையடுத்து இந்த வழக்கு குறித்து பதில்மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசப் கேட்கபட்டதால், வழக்கு விசாரணையை அக்டோபர் 17-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்..Conclusion:
Last Updated : Oct 15, 2019, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.