ETV Bharat / state

ரஜினி கையில் ஆர்எஸ்எஸ்  ஆதாரம்? - சுப.வீரபாண்டியன் சிறப்புப் பேட்டி

பெரியார் குறித்த தனது பேச்சுக்கு ஆதாரமாக ரஜினி வைத்திருப்பது ஆர்எஸ்எஸ் தரப்பிலிருந்து வெளியாகும் போலியான ஆதாங்களாக இருக்கலாம் என்று சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார்.

author img

By

Published : Jan 21, 2020, 5:38 PM IST

Suba Veerapandian on Rajini
Suba Veerapandian on Rajini

துக்ளக் இதழின் பொன்விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் 1971ஆம் ஆண்டு ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து திராவிடர் கழகம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது என்றும் அதை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் என்றும் கூறியிருந்தார்.

உண்மைக்கு மாறான கருத்தை ரஜினி தெரிவித்துள்ளதாவும் அதற்காக ரஜினி கண்டிப்பாக மன்னிப்பு கேட்டவேண்டும் என்றும் பெரியார் சிந்தனைவாதிகள் வலியுறுத்தினர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, "நான் கற்பனையாக எதையும் கூறவில்லை. நான் கேள்விப்பட்டதை, பத்திரிகையில் பார்த்தைத்தான் கூறினேன்’ என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக நமது ஈடிவி பாராத் தமிழ்நாடு ஊடகத்திடம் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன் பேசுகையில், "ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நான் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. அது உண்மைக்கு மாறான செய்தி என்றால் அதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. நான் கேள்விப்பட்டதை சொன்னேன் என்று ரஜினி கூறினால் போதும் என்றே நான் கூறியிருந்தேன்.

இப்போதுகூட அவர் எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. 2017ஆம் ஆண்டு அவுட்லுக்கில் வந்திருக்கிறது என்கிறார். அந்த அவுட்லுக்கையும் அவர் காட்டவில்லை. இரண்டாவது, 1971ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுக்கு 2017ஆம் ஆண்டு வெளியான பத்திரிகை செய்தி ஆதரமாகிவிடாது.

1971ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதற்கு அன்று வெளியான இதழ்கள் மூலமும் அப்போது நடைபெற்ற நீதிமன்ற விவாதங்கள் மூலமும்தான் நாங்கள் கருத்துகளை எடுத்துவைத்திருக்கிறோம்.

ரஜினி கையில் வைத்திருப்பது ஆர்எஸ்எஸ்-இன் போலியான ஆதரமாக இருக்கலாம் - சுப.வீ

மன்னிப்பு கேட்பதும், கேட்காமலிருப்பதும் அவரைச் சார்ந்தது. அதுகுறித்து நான் எதையும் வலியுறுத்தவில்லை. ஆனால் அடிப்படையில் என்ன ஆதாரம் என்பதை அவர் இப்போதாவது வெளியிடட்டும். ஆதாரம் என்று ரஜினி கூறுவதை கையில் வைத்திருக்கிறாரே தவிர அதனை அவர் வெளியிடவில்லை.

ஏனென்றால், ஆர்எஸ்எஸ் தரப்பிலிருந்து பல போலியான ஆதாரங்கள் வெளிவந்துகொண்டிருக்கிறன. அதில் ஒன்றாகவும் அது இருக்கலாம். அவர் அதை வெளியிடாதவரை என்ன மாதிரியான ஆதாரம் என்பது எனக்குத் தெரியாது.

அவர் ஆதாங்களை வெளியிடட்டும், நாங்கள் நீதிமன்ற விவாதங்களை வெளியிடுகிறோம். ஆர்எஸ்எஸ்-காரர்களும், குருமூர்த்தி போன்றவர்களும் சொல்வதை கேட்டுக்கொண்டு அவர் கூறுகிறார் என்றே நான் நினைக்கிறேன்" என்றார்

இதையும் படிங்க: ‘யோக்கியர் என்றால் துக்ளக் ஆதாரத்தைக் காட்டியிருக்க வேண்டும்’ - கொளத்தூர் மணி காட்டம்

Intro:Body:

SU.BA.VEERAPANDI

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.