ETV Bharat / state

சென்னையில் ’நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் கைது - நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்

புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி சாஸ்திரிபவன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது
author img

By

Published : Nov 15, 2021, 2:45 PM IST

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய கல்வி கொள்கை 2020 திட்டம், நீட் தேர்வு (NEET EXAM) ஆகியவற்றை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துக் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நிருபன், ''நீட் தேர்வைச் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றிய பின்னரும் ஆளுநர் கையெழுத்திடாமல் தாமதம் காட்டுவது ஏன்? அவரிடம் பேனா இல்லையா?

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

கோவை பாலியல் சம்பவம் போன்ற செயலில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்திட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடாததால் காவல் துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் தேர்வு வேண்டும் - மாணவர்கள் போர்க்கொடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.