11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற்றது. தமிழ் வழியில் பயின்ற 4 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வினை எழுதினர்.
தேர்வு முடிந்த பின்னர் மாணவிகள் கூறும்போது, ஒரு மதிப்பெண் வினாக்கள் பாடப் புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளன. மற்ற வினாக்கள் எளிதாக தேர்வு எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. மேலும் பாட புத்தகத்தை முழுவதுமாக படித்திருந்ததால், எங்களுக்கு இந்தத் தேர்வு எளிதாக இருந்தது என மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க... நொறுங்கிப்போன முறுக்குத் தொழில்! - நொந்துபோன தொழிலாளர்கள்