ETV Bharat / state

'பள்ளிகளில் மாணவர்கள் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும்' - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு!

சென்னை : பள்ளி மாணவர்கள் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் ஒதுக்கி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

author img

By

Published : Nov 14, 2019, 5:45 PM IST

Students drink 10 minutes

சென்னை சாந்தோமில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா, அரங்க நாதன் நூலகர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு குழந்தைகள் தினவிழா போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். அரங்கநாதன் நூலகர் விருதுகளை சிறந்த நூலகர்களுக்கு வழங்கினார்.

அதன் பின் பேசிய அவர் , 'கேரளாவில் செயல்படுத்தப்படுவது போல், தமிழ்நாட்டிலும் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி வேலை நேரத்தில் 10 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க ஒதுக்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். பாடவேளைகளின் இடைவெளியில் குடிநீர் அருந்தினால் உடல்நலம் மேம்படும் என்ற மருத்துவரின் ஆலோசனையை ஏற்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.

இந்திய நாட்டின் வரலாற்றில் தமிழ்நாட்டில் மட்டும்தான், இதுபோன்ற புதிய கல்வித் திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. நீட் தேர்விற்கு தனியார் நிறுவனத்தின் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 413 இடங்களில் நீட் தேர்விற்கு அரசின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு 'ஐ.சி.டி' என்று சொல்லப்படுகிற இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி, இந்த மாத இறுதிக்குள் உயர் நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் ஆரம்பிக்கப்படும். கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கிற மாணவர்களின் எதிர் காலத்தை மனதில் கொண்டு, டிசம்பர் மாதம் இறுதிக்குள் 90 ஆயிரம் கரும்பலகையினை மாற்றி, ஸ்மார்ட்போர்டுகள் வைப்பதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது.

மேலும், மாணவர்களின் எதிர் காலத்தை மனதில் கொண்டு ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 7 ஆயிரத்து 500 பணிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வருவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தப் பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் நிறைவேற்றப்படும்.

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வேலை இல்லை என்ற நிலையை மாற்ற, அரசு மிக விரைவில் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறது. இப்புதிய திட்டத்தின் மூலமாக மாணவர்கள் தங்களுக்கு ஒரு தொழில் கல்வியை கற்றுக் கொள்ள உள்ளனர். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் பயிற்சி அளிப்பதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. இதனால் எதிர் காலத்தில் தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட்டு, மாணவர்கள் வேலை இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறது' எனக் கூறினார்.

இதையும் படிங்க:

சென்னைக்கு கடத்திய 11 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் - 2 பேர் கைது!

Intro:சிபிஎஸ்இ பள்ளி குமைந்து எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு

Body:சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மறைந்து எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு பொருந்தும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.