கரோனா பொதுமுடக்க தளர்வுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நாளை (ஜன.18) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 11,600 பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் 10 லட்சம் மாணவர்களும், 12ஆம் வகுப்பில் 8 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 18 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.
தற்போது பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களுக்கு சில விதிமுறைகள் கடைபிடிக்க அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பஸ் பாஸ் தொடர்பாக அறிவிப்புகள் இடம்பெறவில்லை. ஆண்டுதோறும் மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்தாண்டு பள்ளிகள் திறக்காததால் அதனை வழங்கமுடியாத சூழல் நிலவியது.
இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாணவர்களுக்கு தற்போது புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதன்படி, 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும், கண்டிப்பாக பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் பயணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ரூ.1.85 லட்சம் சொந்தப் பணத்தில் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்யும் தலைமை ஆசிரியர்