ETV Bharat / state

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்: பெற்றோரை தத்தெடுத்த யானை குட்டிகள்.. ஆஸ்கர் வென்ற தமிழ் காவியம்.. - elephant whisperers story

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ரகுவையும், அம்முவையும் நேரில் கண்டு கண்ணீர் சிந்துகிறார் பெள்ளி. இந்த குட்டிகள் அனாதை ஆகிவிடாமல் வனத்தை அளக்கிறார் பொம்மன். ஆஸ்கர் விருது வென்ற Elephant Whisperers ஆவணப்படத்தின் நாயகர்களான இவர்கள், இன்றும் உணர்ச்சிக் குழம்பாகத்தான் காட்சியளிக்கின்றனர்.

ஆஸ்கர் வென்ற காவிய கதை
ஆஸ்கர் வென்ற காவிய கதை
author img

By

Published : Mar 13, 2023, 10:36 PM IST

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்: பெற்றோரை தத்தெடுத்த யானை குட்டிகள்.. ஆஸ்கர் வென்ற தமிழ் காவியம்..

கோயம்புத்தூர்: ஆஸ்கர் விருது மேடையில் இந்தியாவின் குரல் இன்று மீண்டும் ஓங்கி ஒலித்துள்ளது. அந்த பெருமையை இரண்டு பெண்கள் பெற்றுத் தந்துள்ளனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், இயற்கையோடு இயைந்து வாழ்வதன் சிறப்பை பேசியுள்ளது என்று பாராட்டியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பதிவில், முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு ஒன்றுக்கான ஆஸ்கரை இரு பெண்கள் பெற்றுத் தந்துள்ளதை விடவும், சிறந்த காலைப் பொழுது இருந்து விட முடியாது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய பெருமை மிகுந்த தருணத்தில் கதையின் நாயகர்களின் தடம் தேடி பயணித்தது ஈடிவி பாரத் தமிழ் ஊடகம். நீலகிரி மாவட்டம் முதுமலையில் ஆஸ்கர் வென்ற தருணத்தின் பெருமிதம் அறியாமல் தனது குடிசையில் அமர்ந்திருந்தார் பெள்ளி, தாயை இழந்த யானைக்குட்டிகளை, தனது சொந்த குழந்தையாக கருதி வளர்த்ததாக கூறுகிறார் பெள்ளி. பழங்குடி மாவூத் குடும்பத்தைச் சேர்ந்தவரான பெள்ளி, தனது முன்னோர்களும் இதே தொழிலை செய்வதால் இது தனது ரத்தத்திலேயே இருப்பதாக கூறுகிறார்.

ஆஸ்கர் விருது குறித்து ஏதும் தனக்கு தெரியாது என்றும் வெள்ளந்தியாக கூறும்போது உணர்ச்சிவசப்பட நேரிடுகிறது. இரண்டு யானைக் குட்டிகளும், அவற்றின் பராமரிப்பாளர்களுக்கு இடையிலான பாசப்போராட்டம் தான் எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம். தாய் மற்றும் கூட்டத்தை இழந்த நிலையில் வனத்துறையிடம் அடைக்கலம் புகுந்த இரண்டு குட்டி யானைகளுக்கு கணவரை புலியின் தாக்குதலுக்கு பறி கொடுத்த பெண்ணான பெள்ளி, தத்துத் தாயானார்.

முதலில் சத்தியமங்கலம் வனப்பகுதியிலிருந்து வந்த ரகுவுக்கு தாயாக மாறி, வளர்த்தெடுத்தார். அதன்பின் பொம்மி என்ற பெண் யானை குட்டியும், பெள்ளியிடம் அடைக்கலம் புகுந்தது. மனைவியை இழந்தவரான பொம்மனும் யானைகளை வளர்த்தெடுக்கும் பணியில் இணைய, யானை குட்டிகளே தங்கள் தாய் தந்தையை தேர்ந்தேடுத்தன. யானைகளுக்காக வாழும் இவர்கள் இருவரும் அவைகளாலேயே இணையும் வாழ்வைப் பேசும் படம் தான் Elephant Whisperers ஆவணப்படம்.

பொம்மனின் தற்போதைய இருப்பிடத்தை வனத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, அவர் தருமபுரியில் இருப்பதாக கூறினார்கள். மாரண்டஹள்ளி அருகே தாயையும் வழிகாட்டிகளையும் பறிகொடுத்த குட்டி யானைகளை கூட்டத்துடன் சேர்க்கும் பணியில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார் பொம்மன். அவரிடம் நாம் பேசிய போது, ஆவணப்படத்தில் காண்பிக்கப்பட்ட இரண்டு யானைக் குட்டிகளும் தற்போது தங்களின் கைக்கெட்டாத தூரத்தில் இருப்பதாக கவலையுடன் தெரிவித்தார். ஒரே நாளில் யானைகளை தங்களிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்றதாக கூறினார்.

அம்மு என்றழைக்கப்படும் பொம்மி யானையை முதலில் காப்பாற்றிய மருத்துவரான டாக்டர் அசோகனை சந்தித்து பிரத்யேக பேட்டியை பதிவு செய்தது ஈடிவி பாரத், நமது நிருபர் ஸ்ரீனி சுப்பிரமணியத்துடன் உரையாடிய அவர், தான் முதன் முதலில் அம்முவை சந்தித்த போது, பசியால் அது ஜல்லிக்கற்களை சாப்பிட்டிருந்தது என கூறி அதிரச் செய்தார். பால் குடிக்காமல், மலம் கழிக்காமல் இருந்த அம்முவை மருந்து கொடுத்து மீட்டெடுத்ததாக கூறினார். யானைகளை அடக்கத் தெரிந்த மனிதர்களுக்கு தங்கள் மனதின் பாசத்தை அடக்கத் தெரிவதில்லை. இருப்பினும் கவலைகளை மறக்க முயற்சி செய்தவாறே வனத்தை ஆளப்போகும் பேருயிர்களை காப்பாற்றும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர் இந்த மனிதர்கள்.

இதையும் படிங்க: The Elephant Whisperers: தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.