ETV Bharat / state

Special: ஸ்டார்மிங் ஆபரேஷன்.. நடந்தது என்ன? - திருநெல்வேலி கொலை

52 மணி நேரமாக நடந்த ஸ்டார்மிங் ஆபரேஷன் ரவுடிகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஸ்டார்மிங் ஆபரேஷன் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 21 ஆயிரத்து 592 பழைய ரவுடிகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். அதில் 3 ஆயிரத்து 325 பேர் கைது செய்யப்பட்டதாகவும், நீதிமன்ற வழக்குகளின் பிடியாணைப்படி 294 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 972 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Storming Operation
Storming Operation
author img

By

Published : Sep 30, 2021, 12:26 PM IST

சென்னை : ரவுடிகளை ஒழிக்க தமிழ்நாடு காவல்துறை ஸ்டார்மிங் ஆபரேஷனை கையில் எடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், காவல்துறையின் இந்த ஆபரேஷன் யாரை திருப்தி படுத்துவதற்காக நடந்தது? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழக காவல் துறையால் திடீரென ஸ்டார்மிங் ஆபரேஷன் என்ற பெயரில் பழைய குற்றவாளிகள் உள்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரவுடிகளின் வீடு மற்றும் அவர்கள் பதுங்கி இருக்கக்கூடிய இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Storming Operation
ஸ்டார்மிங் ஆபரேஷன்

இந்தச் சோதனையின் மூலம் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயிரக் கணக்கான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆபரேஷன் முன்பகை காரணமாக அதிகளவில் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதைத் தடுப்பதற்காகவும், ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக காவல்துறை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

52 மணி நேரமாக நடந்த இந்த ஆபரேஷன் ரவுடிகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆபரேஷனின் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 21 ஆயிரத்து 592 பழைய ரவுடிகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். அதில் 3 ஆயிரத்து 325 பேர் கைது செய்யப்பட்டதாகவும், நீதிமன்ற வழக்குகளின் பிடியாணைப்படி 294 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 972 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நன்னடத்தைக்காக பிணை ஆணை பெறப்பட்டு 2 ஆயிரத்து 526 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட ரவுடிகளிடமிருந்து 7 நாட்டு துப்பாக்கி, ஆயிரத்து 110 கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தமிழ்நாடு காவல்துறை மூலம் அறிக்கையாக தகவல் வெளியிடப்பட்டது. அதேபோல மாநிலத்தின் தலைநகரான சென்னையிலும் 257 ரவுடிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 52 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது.
ஆனால் காவலர்களின் இந்த "ஸ்டார்மிங் ஆபரேஷன்" ரவுடிகள் மத்தியில் உண்மையான ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதா? என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சென்னையில் நடுரோட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்று, பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி சம்போ செந்தில், பாம் சரவணன், சீசிங் ராஜா, காஞ்சிபுரம் டான் ஸ்ரீதரின் டிரைவர் தினேஷ் சிறையில் இருந்தே எதிர் தரப்பினருக்கு ஸ்கெட்ச் போடும் ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகள் என முக்கிய ரவுடிகளின் பட்டியலில் உள்ள முதல் 10 பேரில் ஒரு ரவுடி கூட இந்த ஆபரேசனில் போலீசாரால் கைது செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

Storming Operation
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

முக்கிய ரவுடிகளான இவர்களைத் தவிர்த்து, சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மற்றும் குற்றச் செயல்கள் புரியாமல் திருந்தி வாழ்ந்து வரும் பழைய குற்றவாளிகள் உள்ளிட்டோரை மட்டுமே இந்த ஆபரேஷனுக்கு கணக்கு காட்ட போலீசார் கைது செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க திடீரென்று தமிழ்நாடு காவல் துறையால் நடத்தப்பட்ட இந்த ஸ்டார்மிங் ஆபரேஷனின் பின்னணி குறித்த முக்கிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு ஆளுநராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான ஆர்.என் ரவி பொறுப்பேற்ற பின்பு கடந்த 22 ஆம் தேதி டி.ஜி.பி சைலேந்திர பாபுவை நேரில் அழைத்துப் பேசினார்.

அந்த சமயம் திருநெல்வேலியில் முன்பகை காரணமாக 4 நாள்களில் 5 படுகொலைகள் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், முன்பகை காரணமாக நடக்கக்கூடிய கொலைகள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், ரவுடிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் ஆப்ரேஷன் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆளுநரான ஆர்.என் ரவி, டி.ஜி.பி சைலேந்திர பாபு-வுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஐ.பி.எஸ் அலுவலரும், உளவுத்துறை அலுவலராகவும் பணியாற்றியுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இந்த அறிவுரையை வழங்கியதில் ஆச்சரியம் இல்லையென்றாலும், அவரை திருப்திபடுத்த மட்டுமே இந்த திடீர் வெற்று ஆபரேஷன் நடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் கெத்து காட்டியதாக கருதப்பட்ட காவல் துறைக்கு ஏற்பட்ட ஒரு சரிவாகவே பார்க்கப்படுகிறது.
அதற்குச் சான்றாக ஆபரேஷன் நடந்து முடிந்த அடுத்த நாளே சென்னை எம்.ஜி.ஆர் நகர் மற்றும் எண்ணூர் பகுதிகளில் கொலைச் சம்பவங்கள் அரங்கேறியதுடன், மாநகரின் முக்கிய பகுதியான மயிலாப்பூரில் நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஸ்கெட்சு போட்டு காத்திருந்த நபர்கள் சிக்கியது ஆஹா ஓஹோ என்று பேசப்பட்ட ஸ்டார்மிங் ஆபரேஷன் மீதான நம்பகத் தன்மையை இழக்க செய்துள்ளது.
திருந்தி வாழ்ந்து வரும் ரவுடிகளின் வீடுகளின் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்துவது மனித உரிமை மீறல் செயல் எனவும், டாப் 10 ரவுடிகளை கைது செய்யும் அளவிற்கு நம் ஊரில் போலீஸ் இல்லையா என கேள்வி எழுப்புவதாக சமூக ஆர்வலர் ஹென்றி கூறினார். புதிய ஆளுநரை திருப்தி படுத்துவதற்காக மட்டுமே அபரேஷன் என்ற பெயரில் அட்டு ரவுடிகள் கைது செய்து கெத்து காட்டாமல், குற்றச் சரித்திரத்தில் தடம் பதித்த உண்மையான ரவுடிகளை முற்றிலுமாக களையெடுக்கும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க : மூன்று வருடங்களுக்குள் மீண்டும் அல்கொய்தா - அமெரிக்க தளபதி எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.