ETV Bharat / state

'storming Operation' - ரவுடிகளை வேட்டையாடிய தமிழ்நாடு காவல்துறை - ரவுடிகளை வேட்டையாடிய சென்னை காவல்துறை

தமிழ்நாட்டில் ரவுடிகளின் பட்டியலை வைத்து இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு (storming Operation) ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 870 பழைய குற்றவாளிகள் சோதனைக்குட்பட்டு அதில் 450 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரவுடிகளை வேட்டையாடிய தமிழ்நாடு காவல்துறை

author img

By

Published : Sep 25, 2021, 7:21 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் முன்விரோதம் காரணமாக ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு கொலை நடக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. ரவுடிகளின் மோதலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக சென்னை கே.கே. நகரில் ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசியது, மயிலாப்பூர் ரவுடிகளால் நடுரோட்டில் நடத்தப்பட்ட கொடூர கொலை போன்ற சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்கள் கடந்த இரண்டு மாதங்களாக ரவுடிகளின் பட்டியலை சேகரித்தனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 6,000 ரவுடிகளின் பட்டியல் காவல் துறையினரால் சேகரிக்கப்பட்டது. இந்த பட்டியலை வைத்து இரவு முதல் முற்றுகை செயல்பாடு (storming Operation) ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது.

ரவுடிகளை வேட்டையாடிய தமிழ்நாடு காவல்துறை
ரவுடிகளை வேட்டையாடிய தமிழ்நாடு காவல்துறை

ரவுடிகளை வேட்டையாடிய தமிழ்நாடு காவல்துறை

இந்த திடீர் சோதனையில் தமிழ்நாடு முழுவதும் 870 பழைய குற்றவாளிகள் சோதனைக்குட்பட்டு அதில் 450 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களில் 181 பேர் நீதிமன்ற பிடியாணையின் உத்தரவுப்படி கைதானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ரவுடிகளின் வீட்டில் நடத்திய சோதனையில் 3 நாட்டுத் துப்பாக்கிகள், 250 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் 420 ரவுடிகள் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதன்படி குற்றவியல் நடைமுறை சட்டம் 110-இன் பிரிவின் கீழ் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கி எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 717 ரவுடிகளின் வீடுகளில் அதிரடியாக நடத்திய சோதனையில் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 13 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரவுடிகளை பிடிக்க 2 பிரிவு

ரவுடிகளின் கைது நடவடிக்கை தொடரும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஏ-பிளஸ், ஏ,பி,சி ஆகிய பெயரில் ரவுடிகளை பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ள ரவுடிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் உள்ள வழக்குகள் தொடர்பாக துணை ஆணையர் ஆய்வு செய்து விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

ரவுடிகளை பிடிக்க 2 பிரிவுகளை தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னையில் புதிதாக 2 ரவுடிகள் ஒழிப்பு பிரிவு தொடங்கப்பட உள்ளது. சென்னை வடக்கு மண்டலத்தில் ஒரு பிரிவும், தெற்கு மண்டலத்தில் ஒரு பிரிவும் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அதிரடி நடவடிக்கையை காவல்துறை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பசுபதி பாண்டியன் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் நிகழ்ந்த கொலை - 3 பேர் சிறையில் அடைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.