ETV Bharat / state

ஸ்டெர்லைட்டை திறக்கக்கோரிய வழக்கின் தீர்ப்பு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர் நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

ஸ்டெர்லைட் வழக்கு  ஸ்டெர்லைட் ஆலை திறக்கோரிய வழக்கு  sterlite factory reopen case  சென்னை உயர் நீதிமன்றம்  வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் வழக்கு
ஸ்டெர்லைட் ஆலை திறக்கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடமால் ஒத்திவைப்பு
author img

By

Published : Jan 8, 2020, 7:27 PM IST

Updated : Jan 8, 2020, 8:02 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம்,பவானி சுப்பராயன் அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையின் 39ஆவது நாளான இன்று, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு சார்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

அப்போது, அரசு தரப்பில் தூத்துக்குடி சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லையெனவும், மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆலையைச் சுற்றி 25 மீட்டருக்கு பசுமை போர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை விதியைக் கூட ஆலை நிர்வாகம் பின்பற்ற தவறிவிட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் விதிகளைத் தொடர்ந்து பின்பற்ற மறுத்ததின் காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவும், உச்ச நீதிமன்றம் கடந்த காலத்தில் விதிகளை பின்பற்றாததற்காக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு விதித்த 100 கோடி ரூபாய் அபராதமே அதற்கு சான்று எனவும் குறிப்பிடப்பட்டது.

மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், நாளொன்றுக்கு 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக வேதாந்தா நிர்வாகம் கூறும் அதே வேளையில், ஆலை செயல்படத்தொடங்கிய 1997ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை அவர்கள் கூறும் கணக்கை அடிப்படையாக வைத்து பார்த்தாலே 20 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது தெரிய வருவதாகவும், 3ஆயிரம் கோடி முதலீடு செய்து 20ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டிய பின்னரும் ஆலை மூடியதால் பலத்த நஷ்டம் என்று கூறுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என எடுத்துரைக்கப்பட்டது.

இதனையடுத்து ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டால், அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு செயல்படுவோம் என்றும் கூடுதல் கட்டுப்பாடு விதித்தாலும் அதைப் பின்பற்றத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு தரப்பு, ஆலை நிர்வாகம் தரப்பு, இடையீட்டு மனுதாரர்கள் தரப்பு என அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: சட்டப்பேரவையில் மூன்றாம் நாளும் காரசார விவாதம்

Intro:Body:தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை தொடர்ந்து பின்பற்ற மறுத்ததன் காரணமாகவே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக தமிழக அரசு தனது இறுதி வாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை
நீதிபதிகள் சிவஞானம்,பவானி சுப்பராயன் அமர்வு விசாரித்து வருகிறது.

வழக்கு விசாரணையின் 39-வது நாளான இன்று,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தமிழக அரசு சார்பில், அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

அப்போது, அரசு சார்பில் தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர வேறு வழியே இல்லையெனவும், மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆலையை சுற்றி 25 மீட்டருக்கு பசுமை போர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை விதியை கூட ஆலை நிர்வாகம் பின்பற்ற தவறி விட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் தூத்துக்குடி சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் விதிகளை தொடர்ந்து பின்பற்ற மறுத்ததின் காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவும்,
உச்சநீதிமன்றம் கடந்த காலத்தில் விதிகளை பின்பற்றாததற்காக ஆலை நிர்வாகத்திற்கு விதித்த 100 கோடி அபராதம் அதற்கு சான்று எனவும் குறிப்பிடப்பட்டது.

மேலும், கடந்த 2018 ம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக வேதாந்தா நிர்வாகம் கூறும் அதே வேளையில், ஆலை ஆரம்பித்த 1997 ம் ஆண்டில் இருந்து தற்போது வரை அவர்கள் கூறும் கணக்கை அடிப்படையாக வைத்து பார்த்தாலே 20 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது தெரிய வருவதாகவும், 3000 கோடி முதலீடு செய்து 20,000 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிய பின்னரும் ஆலை மூடியதால் பலத்த நஷ்டம் என்று கூறுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என எடுத்துரைக்கப்பட்டது.

இதனையடுத்து ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆரியமா சுந்தரம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டால் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு செயல்படுவோம் என்றும் கூடுதல் கட்டுப்பாடு விதித்தாலும் அதை பின்பற்ற தயாராக
உள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு தரப்பு, ஆலை நிர்வாகம் தரப்பு, இடையீட்டு மனுதாரர்கள் தரப்பு என அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Conclusion:
Last Updated : Jan 8, 2020, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.