ETV Bharat / state

தமிழ்நாட்டில் மீண்டும் ATP போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மெய்யநாதன் உறுதி - ATP tournaments in TamilNadu

தமிழ்நாட்டில் மீண்டும் ATP போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மீண்டும் ATP போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மெய்யநாதன் உறுதி

author img

By

Published : Sep 12, 2022, 9:02 PM IST

சென்னை: சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், "உலக மகளிர் டென்னிஸ் போட்டியை தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும் இணைந்து வெற்றிகரமாக குறைந்த அளவிலான நாட்களுக்குள் ஏற்பாடுகள் செய்து இன்று போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன.

உலகில் இன்றைய தினம் 2.5 கோடி பேர் இன்று நடைபெற்று வரும் போட்டிகளை பார்வையிட்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 18ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பங்கேற்று 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வழங்க உள்ளார். இனி நடைபெறும் அனைத்துப்போட்டிகளிலும் மக்கள் அதிகளவில் வருவார்கள்.

குறிப்பாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் அதிக மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களை மைதானத்தை நோக்கி கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் போட்டிகளை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் உள்ள டென்னிஸ் சங்கத்துடன் இணைந்து, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு டென்னிஸ் பயிற்சி வழங்க இருக்கிறோம்.

அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர் சந்திப்பு

ATP போட்டிகள் தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டு வர, முதலமைச்சரிடம் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தலைவர் விஜய் அமிர்தராஜ் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக முதற்கட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். முதலமைச்சர் கோப்பையில் கபடி போட்டி மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக சென்னையை மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

இந்தப்போட்டி நடத்துவதற்கான முக்கிய காரணமே, மாணவ மாணவிகளும் இந்த விளையாட்டு குறித்த விழிப்புணர்வை பெற வேண்டும் என்பதற்காகத்தான்" எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.