ETV Bharat / state

தங்க.தமிழ்செல்வனுக்கு திமுகவில் புதிய பொறுப்பு! - தங்க.தமிழ்செல்வன் குறித்த செய்திகள்

சென்னை: தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்க. தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது திமுக-வின் கொள்கை பரப்பு துணைப் பொதுச்செயலாளராக உள்ளார்.

தங்க.தமிழ்செல்வனுக்கு திமுகவில் புதிய பொறுப்பு!

author img

By

Published : Oct 1, 2020, 1:34 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் நிர்வாக ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மாநிலத்தின் பிரதான கட்சியான திமுக, புதிய பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேனி மாவட்ட திமுக-விற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்க.தமிழ்செல்வனும், தேனி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பொறுப்பாளராக என். ராமகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது திமுக-வின் கொள்கை பரப்பு துணைப் பொதுச்செயலாளராக உள்ள தங்க.தமிழ்செல்வனுக்கு கட்சியில் கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கட்சிப் பணியை விரிவு படுத்துவதற்காக பிரிக்கப்பட்டு இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக திருச்சி, சேலம், விழுப்புரம் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.