ETV Bharat / state

கருணாநிதி சிலை வைக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு! - Madras High Court

திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்க விதிக்கப்பட்ட தடையை ஜூன் 6ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Jun 2, 2022, 10:35 PM IST

சென்னை: திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையும் மாநில நெடுஞ்சாலையில் இணையும் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்க மாவட்ட திமுக சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்தப் பகுதியில் சிலை வைப்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பக்தர் கார்த்திக் என்பவர் சிலை வைக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிலை அமைப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்கக்கோரி சிலை அமையவுள்ள இடத்துக்கு உரிமையாளரான ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ் மற்றும் முகமது ரபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (ஜூன் 02) விசாரணைக்கு வந்தபோது, தனியார் பட்டா நிலத்தில் சிலை வைப்பதை எதிர்த்து எப்படி பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பி இந்த வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்கள்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனியார் நிலமாக இருந்தாலும் சிலை வைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டி உள்ளதாகக்கூறி விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

நாளை (ஜூன் 03) நடக்க இருந்த சிலை திறப்பு விழாவை வேறு தேதிக்கு மாற்றவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன்மூலம் சிலை திறக்க தடை விதித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், ஜெ. சத்தியநாராயண பிரசாத் ஆகியோரின் இடைக்கால உத்தரவு தொடர்கிறது.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக செயல்படும் ஓய்வு விடுதிகளை மூடக்கோரிய மனு: வனத்துறை பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.