ETV Bharat / state

’சிறுபான்மையினருக்கும் அரசுக்கும் பாலமாகச் செயல்படுவேன்’ - பீட்டர் அல்போன்ஸ் - கலைஞர் கருணாநிதி

சிறுபான்மையினருக்கும் அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படப்போவதாகத் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்
author img

By

Published : Jun 30, 2021, 8:24 AM IST

சென்னை: சிறுபான்மையினரின் கல்வி, சமூகம், பொருளாதார மேம்பாட்டிற்காகச் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நேற்று (ஜூன் 29) நியமிக்கப்பட்டார்.

யார் இந்த பீட்டர் அல்போன்ஸ்?

தமிழ்நாடு காங்கிரசின் மூத்தத் தலைவரான பீட்டர் அல்போன்ஸ் 1989, 1991ஆம் ஆண்டுகளில் தென்காசி சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2006ஆம் ஆண்டு கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தவர்.

சிறுபான்மையினரின் உரிமைகள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பீட்டர் அல்போன்ஸ், நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நேரில் நன்றி தெரிவித்தார்.

அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு எனக்கு அளித்த பொறுப்பின் மூலம் சிறுபான்மை மக்களின் நலன், உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்.

சிறுபான்மையினரைக் காக்கும் ஜனநாயகம்

சிறுபான்மையினரைப் பொறுத்தவரை மத சிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினர் என இரண்டாக நாம் பிரிக்கலாம். சிறந்த ஜனநாயக நாட்டில் சிறுபான்மை இன மக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியம். இந்த அளவீடே ஒரு நாட்டின் சிறந்த ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டாக அமையும்.

இட ஒதுக்கீடு

சிறுபான்மை மக்களுக்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஏராளமான திட்டங்கள் வகுத்ததோடு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார். அவரது வழியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறுபான்மையின மக்களுக்காகப் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார்.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

சிறுபான்மையின மக்களுக்கும்-அரசுக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தையும் சுமுக உறவையும் நான் ஏற்படுத்துவேன். மத வேறுபாடுகளைக் களைந்து, சிறுபான்மையினர் அனைவரும் ஒற்றுமையுடன், தமிழ்நாடு வளர்ச்சியின் முன்னேற்றத்திற்கு இணைந்து பாடுபடுவோம். அதற்கு நான் ஒரு பாலமாக இருப்பேன்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையத்தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.