இந்திய பொருளாதார சரிவுக்கு பாஜக அரசே காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்பிரியா ஸ்ரீநேட் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘தொடர்ந்து பல துறைகளில் இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. யாரேனும் பொருளாதார வீழ்ச்சி பற்றி பேசினால் அவர்களை இந்த அரசாங்கம் கடுமையாக விமர்சிக்கின்றது. வரலாற்றிலே முதல் முறையாக நமது பொருளாதாரம் கேள்விக்குறியானது. பல புள்ளிவிவரங்களை வெளி வர விடாமல் பாஜக அரசாங்கம் தடுக்கிறது’ என குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பாக பாஜக அரசை எதிர்த்து தொடர்ந்து பத்து நாட்கள் பொது மக்களிடம் சென்று பொருளாதார மந்தநிலைக்கு காரணமான பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’மோடிக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது’ - ராகுல்