ETV Bharat / state

அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை - யு.ஜி.சி திட்டவட்டம்

சென்னை: அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

author img

By

Published : Oct 29, 2020, 11:31 AM IST

MHC
MHC

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு, இறுதிப் பருவத் தேர்வு தவிர, மற்ற பருவத் தேர்வுகள் ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளுக்குப் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (University Grants Commission) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது என தெரிவித்துள்ளது. இந்த வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கரோனா ஊரடங்கு காரணமாக செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே பல்கலைக்கழக மானிய குழு சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. திறமையான புதுமையான முறையில் தேர்வை நடத்தலாம், தேர்வின் தரத்தை சமரசம் செய்யாமல் தேர்வு நேரத்தை குறைக்கலாம்.

அனைத்து மாணவர்களுக்கும் தகுந்த இடைவெளியோடு, ஷிப்ட் முறையில் தேர்வுகளை நடத்தலாம். கல்வி நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வைத்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்வுகளை ஆப்-லைன், ஆன்-லைன் மூலம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசு பருவத்தேர்வு மற்றும் இறுதித்தேர்வை நடத்தாமல் கடந்த தேர்வைகளை வைத்து மதிப்பெண் வழங்க எந்த அதிகாரமும் கிடையாது. தேர்வை நடத்துவதற்கான கால அவகாசத்தை தள்ளிவைக்க மாநில அரசுகள் கேட்டுப்பெறலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.