சென்னை: தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை உருவாக்கும் உயர்நிலைக் குழுவின் உறுப்பினரும் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் ஜவகர்நேசன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கல்வியின் நலனையும் மாநிலத்தின் இளைஞர்களின் எதிர்கால நலனையும் மனதில் கொண்டு மாநிலத்தின் சரித்திர மரபுகளை தற்போது சூழலையும் கருத்தில் கொண்டு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக தமிழ்நாடு அரசு உயர் நிலைக் குழுவை உருவாக்கியது.
இந்த முடிவை எடுத்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தேசிய கல்விக் கொள்கை 2020 மறுத்தலித்து எடுக்கப்பட்ட கொள்கை முடிவு மாநிலத்திற்கு என்று தனித்துவமான கல்விக் கொள்கையின் அவசியம் எனும் முதல்வரின் லட்சிய நோக்கத்தை உணர்த்தியது.
தமிழ்நாடு மக்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பரந்துபட்ட எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது வரலாற்று சிறப்புமிக்க இந்த உயர்நிலைக் குழுவில் ஒரு உறுப்பினராக முக்கிய பங்கினை ஆற்றுவதற்கு பொறுப்பு அளித்த அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். அறிவியல் ரீதியாக நிறுவப்பட்ட முறைகளையும் தரங்களையும் கடைப்பிடிக்காமல் தனித்துவமிக்க கொள்கையை உருவாக்க முடியாது.
சமூக நிலைகள் மற்றும் கல்வி செயல்பாடுகள் சமூகத்தின் விருப்பச் சார்புகள் குறித்து கண்டறிதல் கொள்கை மாற்றுகள், ஒவ்வொரு கொள்கை மாற்றம் நடைமுறைப்படுத்துவதில் உள்ள பொருளாதார ரீதியான சமூக ரீதியான வரையறைகளை ஆய்வு செய்து நமக்கு உகந்த சரியான கொள்கை மாற்றத்தை தேர்ந்தெடுத்தல், பொதுக் கொள்கை என்பது அனைவருக்கும் ஆனது. அது சமூகம் முழுமைக்கும் செயல்படுத்தப்படும் எனவே இந்தக் கொள்கை உருவாக்கும் சமூகத்தில் அதன் பயனாளிகளின் பல்வேறுபட்ட நலன்களையும் தேவைகளையும் நியாயமான முறையில் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இதற்காக பயனாளிகளுடன் விவாதிக்க பேரம் பேச வேண்டி இருக்கும் இதை மனதில் வைத்தே குழு தன் செயல்பாட்டில் தொடங்கிய நாள் முதல் இருந்தே விரும்பத்தக்க முடிவை அடைவதற்காக கொள்கை உருவாக்கத்திற்கும் குழுவின் செயல்பாட்டிற்கும் என்னால் இயன்றவரை பங்களித்து வந்துள்ளேன். செயலகத்தையும் அதற்கான வளங்களையும் ஏற்படுத்துதல் அடிப்படை கருப்பொருளை தீர்மானித்து அதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குதல். தமிழ்நாட்டிற்கான தனி கல்வி கொள்கை அவசியம் என்ற கருத்துரு உருவாக்குதல் சிக்கல்கள் குறித்த கருத்துரு ஒரு உருவாக்குதல் போன்றவை குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சர்வதேச அளவில் 113 வல்லுனர்கள் கொண்ட 13 துணை குழுக்களை உருவாக்கி யுவாதித்து தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்யும் முறைகளை உருவாக்கியது. இதற்காக 50 பள்ளிகள் 15 கல்லூரிகள் 5 பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன இதுவரை 22 நிறுவனங்களில் மாதிரி ஆய்வுகளை முடித்தது ஆகிய பணிகளை செய்ததும் அடங்கும். பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் இடைக்கால அறிக்கை எழுதி உயர்நிலைக் குழுவிற்கு சமர்ப்பித்து இருக்கிறேன்.
இது நீண்ட காலத் திட்டத்திற்கும் நடைமுறை செயல்பாடுகளுக்கும் திசை மற்றும் வழிகாட்டக் கூடியது நம் மாநிலத்தில் நிலவும் தனித்த சூழல்களையும் சிக்கல்களையும் கணக்கில் கொண்டு இந்த அறிக்கையை எழுதியிருப்பதால் இது நமக்கென தனித்துவமான இறுதிக் கொள்கையை வகுக்க பெரும் பங்களிப்பை வழங்கும் அடிப்படை வசதிகளும் கட்டமைப்பும் இல்லாத நிலை தற்போது வரை நீடிக்கிறது இந்த நிலையில் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்த வேலைகளை அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறேன்.
ரகசியமாகவும் ஜனநாயக முறையிலும் செயல்படும் தலைமையை கொண்டதாலும் சில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் அதிகார எல்லை மீறலாலும் முறையற்ற தலையீடுகளாலும் இயங்க முடியாமல் உயர்நிலை கல்வி தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த காரணத்தினால் உயர்நிலைக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் எனது பணியை தொடர்ந்து செய்வதற்கும் பங்களிப்பை தொடர்ந்து வழங்குவதற்கும் மேன்மேலும் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.
அதன் விளைவாக தேசிய கல்விக் கொள்கையை 2020 ஐ பின்பற்றி மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநில கல்விக் கொள்கை பெயரில் மட்டுமே மாற்றம் கொண்ட தனியார்மைய வணிக மைய கார்ப்பரேட் சந்தை சக்திகளின் நலன்களை கொண்டிருக்கின்ற தேசிய கல்விக் கொள்கை 2020இன் மற்றொரு வடிவமாகவே இருக்கும். அது தமிழ்நாடு மக்களின் விருப்ப உணர்வுகளுக்கும் தமிழ் சமூகத்தின் உரிய விழுமியங்களுக்கும் பெரும்பாலும் எதிராக கல்விக் கொள்கையின் விளைவுகள் இருக்கும் என அஞ்சுகிறேன்.
தமிழ்நாடு அரசு குழுவிற்கு அளித்துள்ள ஆய்வு வரையறைகளை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கத்துடன் உயர்நிலை குழு செயல்பட்ட போதும் நான் குழுவின் கொள்கை உருவாக்கும் நடைமுறையையும் தேவையான இலக்குகளை அடையும் திட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் எனது பங்களிப்பினை தொடர்ந்து படியே இருந்தேன். எனினும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் கடும் சினத்துடன் தகாத வார்த்தைகளை கூறி எண்ணெய் அச்சுறுத்தி அவர் திணிக்கும் நிபந்தனைகளை வலுக்கட்டாயமாக ஏற்று செயல்பட வேண்டுமென அழுத்தம் தந்தார்.
இத்தகைய அதிகாரியின் வரம்பு மீறிய செயல்களையும் பாதுகாப்பற்ற நிலையையும் கடந்த சில மாதங்களில் குழு தலைவரிடம் பலமுறை முறையிட்டும் கூட அவை அனைத்தையும் எதிர்வினை துளியேதும் ஆற்றாமல் புறம் தள்ளும் போக்கினை கடை பிடித்தார் தலைவர் இதுவரை இந்நிகழ்வு குறித்து என்னுடைய கருத்தை கேட்கவில்லை. இதில் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் அவர் தரவில்லை மொத்தமாக அதிகார வர்க்கத்தின் தலையீடுகளில் இருந்தும் குழுவிற்குள் செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கைகளில் இருந்தும் குழுவின் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை பாதுகாக்க குழுவின் தலைமை தவறிவிட்டது என்பதை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.
இதற்கான தீர்வை வேண்டி குழு தலைவரிடம் செய்த முறையீடுகள் கேட்கவே படாமல் போனதால் தக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பினேன். எனது கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. சூழலை சரி செய்ய என்ற அனைத்து வழிகளிலும் முயன்று கலை பற்றி உண்மையும் ஜனநாயகமும் அற்ற இந்தக் குழுவின் சூழலும் அதிகார வர்க்கத்தின் தலையீடுகளும் அச்சுறுத்தலும் என் செயல்களை முடக்க பெரும்பாலும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டு இதன் மேலும் குழுவில் நீடிப்பது பொருளற்றது என்று உணர்கிறேன்.
எனவே உயர் மட்ட குழுவில் இருந்து நான் விலகுகிறேன். நம் மக்களுக்கும் அரசுக்கும் உலகளாவிய அனுபவத்தால் பெற்ற என் அருவியும் திறமையும் கொண்டு பணியாற்றுகின்ற வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பிலிருந்து விலகுவதை காட்டிலும் எனக்கு மிகுந்த துயர் தருவது எதுவும் இல்லை. இருப்பினும் இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் மாநில கருவிகளை உருவாக்குவதற்கு எனது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவேன் என்று கூறுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய கீதத்தை கோட்டாட்சியர் அவமதித்ததாக சக அலுவலர்கள் குற்றச்சாட்டு