உலகை அச்சுறுத்தும் கரோனா தொற்றுக்கு தற்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மருத்துவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதால் அவர்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
அதன்படி ஸ்டான்லி மருத்துவமனையில் கண்ணாடி அறையிலிருந்து நோயாளியை மருத்துவர் பரிசோதனை செய்யும் வகையில் பாதுகாப்பு ஏற்பாட்டுடன் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கண்ணாடி அறையிலிருந்து நோயாளியின் உடல்நிலை மற்றும் சிகிச்சைக்கான நடவடிக்கைகளை மருத்துவரால் மேற்கொள்ள முடியும். இதனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.