ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலுக்காக நிலைக் குழுக்கள் நியமனம்! - ஐந்து தேர்தல் நிலை குழுக்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐந்து மாநகராட்சிகளில் நிலைக் குழுக்களை அமைத்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

harmand singh
author img

By

Published : Nov 5, 2019, 4:58 PM IST

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் கிராமப் பகுதிகளில் நடக்கவேண்டிய பல்வேறு கட்ட பணிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தேர்தல் வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்ப்பு, திருத்துதல், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றிற்கான இணையதள அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. மேலும், மூன்று வருடத்திற்கு மேலும் சொந்த ஊர், அல்லது பிற மாவட்டங்களில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து உறுப்பினர்கள் பதவி ஏற்ற பிறகு, நிலைக் குழுக்கள் மற்றும் சட்டப்பூர்வ குழுக்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்தும்.

இதற்கு முன்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் நிலைக் குழுக்களை அமைக்க வேண்டும். அதனடிப்படையில், ஐந்து மாநகராட்சிகளில் நிலைக் குழுக்களை அமைத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், ஆவடி உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து மாநகராட்சிகளில் கணக்கு, கல்வி, சுகாதாரம், வரி விதிப்பு, பணிகள், நகரமைப்பு ஆகிய ஆறு நிலைக் குழுக்களை அமைத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:

ஆணையர்கள் அதிரடி மாற்றம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Intro:

Body: உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் 5 மாநகராட்சிகளில் நிலை குழுக்களை அமைத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி பதவி காலம் ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. மேலும் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த உறுப்பினர்கள் பதவி ஏற்ற பிறகு நிலைக் குழுக்கள் மற்றும் சட்டபூர்வ குழுக்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தும். இதற்கு முன்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளை யும் நிலை குழுக்களை அமைக்க வேண்டும். இதன்படி ஐந்து மாநகராட்சி களில் நிலை குழுக்களை அமைத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், ஆவடி உள்ளிட்ட 5 மாநகராட்சி களில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 5 மாநகராட்சிகளில் கணக்கு, கல்வி, சுகாதாரம், வரி விதிப்பு, பணிகள், நகரமைப்பு ஆகிய 6 நிலைக் குழுக்கள் அமைத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.