ETV Bharat / state

சிவகாசியில் பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்! - chennai news

சென்னை: அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில் நடைபெற்ற தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின் கண்டனம்
ஸ்டாலின் கண்டனம்
author img

By

Published : Mar 4, 2020, 4:25 PM IST

சிவகாசியில் நேற்று இரவு புலனாய்வு பத்திரிகையாளர் மீது அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், பலத்த காயம் அடைந்த பத்திரிகையாளர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்தத் தாக்குதலுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றி செய்தி வெளியிட்டது தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'ஆவின் மேலாளர் பதவிக்கு, அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியின் மனைவியும், மற்றொரு மேலாளர் பதவிக்கு விருதுநகர் அதிமுக பிரமுகர் மகனும் நியமிக்கப்பட்டது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளையும், அரசியல் மோதல்களையும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம், ஒரு புலனாய்வு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அதன் செய்தியாளர் மீது இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Stalin
ஸ்டாலின் கண்டன அறிக்கை- 1
Stalin
ஸ்டாலின் கண்டன அறிக்கை- 2

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில், நடைபெற்றுள்ள இந்தக் கொலைவெறித் தாக்குதலுக்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஏற்கெனவே மதரீதியான வன்முறை, வெறுப்பு வார்த்தைகளை மேடைகள்தோறும் வெளிப்படுத்தி வருவதுடன், திமுகவினர் மீது தாக்குதல் நடத்துவேன் என தடித்த வார்த்தைகளையும் எவ்விதக் கூச்சமும் அச்சமுமின்றிப் பயன்படுத்தி வருகிறார்.

எப்போது யாரைப்பற்றிப் பேசினாலும் "அடிப்பேன், உதைப்பேன், நாக்கை அறுப்பேன், தூக்கிப்போட்டு மிதிப்பேன்" என்று, அமைச்சராக இருக்கும் ஆணவத்தினால், அராஜகமாகக் பேசி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அமைதி காப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் கார்த்திக்குக்கு உரிய தரமான சிகிச்சையும் பாதுகாப்பும் அளிக்கப்படவேண்டும்' என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:வீட்டில் கத்தியுடன் நுழைந்து மிரட்டியர்: சிசிடிவியில் சிக்கி கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.