ETV Bharat / state

'எடப்பாடி அரசு பல்டி அரசாக மாறிவிட்டது' - ஸ்டாலின் சாடல்! - mk stalin tweets about go cancellation

சென்னை: தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றுவதற்கான அரசாணையை திரும்பப் பெற்று எடப்பாடி பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறி விட்டது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

stalin
stalin
author img

By

Published : Jun 18, 2020, 11:29 PM IST

சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்தில் அமைத்து, எழுதி செயல்படுத்த வேண்டும் என்ற அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. ஆனால், இந்த அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும் அடுத்த சில நாள்களுக்குள் உரிய பரிசீலனை நடத்தப்பட்டு மீண்டும் ஊர்ப்பெயர்கள் குறித்து வெளியிடப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கான அரசாணையை திரும்பப் பெற்றுள்ளது, தமிழ்நாடு அரசு. முதலிலேயே வல்லுநர்களிடம் கருத்துக் கேட்டிருக்க வேண்டாமா? ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே மேதைகளாக நினைத்துக் கொண்டார்களா? எடப்பாடி பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறிவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார்‌.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.