தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் சந்தேகத்திற்கிடமான முறையில் சிறையிலேயே உயிரிழந்தனர்.இச்சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தின் கதறல் நெஞ்சை பதறச் செய்கிறது! உடுமலை சங்கரின் ஆணவக்கொலையில் உரிய ஆதாரங்களைச் சமர்பிக்காமல் கடமை தவறியிருக்கிறது காவல்துறை! இது பழனிசாமியின் ஆட்சியா? காவல்துறையின் ஆட்சியா? ஏவல்துறையாக மாறிவிடாமல் பொறுப்பு உணர்ந்து காவல்துறை செயல்பட வேண்டும்! ” எனப் பதிவிட்டுள்ளார்.