இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட புகாரை இன்று அதிகாலையில் தூசு தட்டி திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் மீது ஆர்.எஸ். பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலைத் துறையில் கரோனா கால டெண்டர் ஊழல் மீதும் புகார் மற்றும் ஆதாரங்கள் கொடுத்திருக்கிறார். அதனால் அதிமுக அரசு கரோனா ஊழலையும், நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்ப குரோத எண்ணத்துடன் ஆர்.எஸ். பாரதியைக் கைது செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆர்.எஸ். பாரதி இடைக்கால பிணையில் விடுவிப்பு